Thursday, 18 January 2018

தாது மணல் தொழில் நிறுத்தமும், தொழிலாளர் பாதிப்பும் மற்றும் அரசின் இழப்பும்


தாது மணல் தொழிலால் பல ஆயிரம் தொழிலாளர்கள் பலன் அடைந்து வருகிறார்கள். அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலவாணி ஈட்டி வருகிறது. மாநில அரசுக்கு சுமார் 680 கோடி ரூபாய்க்கு மேல் வரி வகையில் வருமானம் கிடைக்கும். இது போக விற்பனை விலையில் 3 சதவீத ராயல்டியும் கிடைக்கும். துரதிஷ்டவசமாக உள்நோக்கத்தோடு நிறுத்தப்படும் தொழில்கள் எல்லாம் ஒரு அபாண்ட குற்றச்சாட்டோடு நிறுத்தப் பட்டு பிறகு அது ஏகபோகமாக கொள்ளைக்கு வழி வகுக்கிறது. இதற்கு ஒரு உதாரணம் தனியார் ஆற்றுமணல் குவாரியை நிறுத்தி அரசு குவாரி செய்ய ஆரம்பித்த பிறகு ஆறுகள் சூறையாடப் பட்டன. பொது மக்களோ மாவட்ட ஆட்சியரோ இதனை கேள்வி கேட்க முடியாத நிலை ஏற்பட்டது. இதே போன்ற ஒரு நிலையை தாது மணல் தொழிலும் கொண்டு வருவதற்கு மணல் மாபியாக்கள் செய்த மறைமுக திட்டத்தாலேயே சில ஆண்டுகளுக்கு முன்பு தாது மணல் நிறுத்தப் பட்டது. அதிகாரம் படைத்த மத்திய அரசு தன் அதிகாரத்தை செயல்படுத்தவில்லi. அவர்கள் நிறுவனத்திற்கு எந்த சுற்றுச்சூழல் அனுமதியையும் வாங்காமல் இயக்கியதாலேயே 2004 சுனாமியில் அரசு நிறுவன தாது மணல் குத்தகை உள்ள குளச்சல் கிராமத்தில் 400 நபர்கள் பலியானார்கள். ஆனால் முறையான சுற்றுச்;சூழல் அனுமதி பெற்ற தனியார் நிறுவன குத்தகை பகுதிகளில் ஒரு உயிர் சேதமும் இல்லை. இதனை கண்டுணர்ந்தே தேசிய பசுமை தீர்ப்பாயம் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாத நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவிட்டது. தற்போது அதில் இருந்து மீள்வதற்கு வழக்கம் போல் மீடியாவை வைத்து 1500 தொழிலாளர் பாதிப்பு என  பிரச்சாரம் செய்கிறார்கள். 50000 தொழிலாளர்கள் 5 வருடங்களாக பாதிக்கப் பட்டு உள்ளார்களே.. இதற்கு சக தொழிலாளியாக இவர்கள் குரல் கொடுத்தார்களா? இந்த ஊடகங்கள் உள்நோக்கத்தோடு தானே அந்த செய்திகளை இருட்டடிப்பு செய்தன. 

எப்படியாயினும் தாது மணல் தொழிற்சாலை நிறுத்தத்தால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற உண்மையை இப்போதாவது உலகிற்கு சொன்னதற்கு நன்றியே..!!






Tuesday, 2 January 2018

தாது மணல் தொழிலுக்கும் கதிர்வீச்சுக்கும் தொடர்பே இல்லை...!

இயற்கையாகவும், செயற்கையாகவும், மனிதன் கதிர்வீச்சை எதிர்கொள்கிறான். இதில் செயற்கையாக எற்படும் கதிர்வீச்சுகள் மிகவும் குறைவு. இயற்கையாக ஏற்படும் கதிர்வீச்சின் பாதிப்பு அதிகம். உதாரணமாக சூரியனில் இருந்து ஏற்படும் புறஊதா கதிர்வீச்சு இதர செயற்கையான கதிர்வீச்சுகளை விட கூடுதலாக பாதிப்பு கொடுக்கப் கூடியது. இந்த புறஊதா கதிர்வீச்சு சூரியனில் இருந்து வருவதை தடுப்பது மேலே உள்ள ஓசோன் படலம். புவி வெப்பமயமாதலாலும், காடுகள் அழிக்கப் படுவதாலும், போதிய அளவு மரங்கள் வளர்க்கப் படாததாலும் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து புறஊதா கதிர்கள் பூமியை நேரடியாக தாக்குகின்றன. எனவே இயற்கையாகவே மனிதன் கதிர்வீச்சுக்கு ஆளாகும் நிலை உள்ளது. கீழ்கண்ட படம் செயற்கையாகவும், இயற்கையாகவும் உருவாகும் கதிர்வீச்சு மற்றும் அவற்றின் அளவு பற்றி விவரிக்கிறது. பொது மக்களிடம் கதிர்வீச்சு பற்றிய ஒரு புரிதல் இல்லாமையை கருத்தில் கொண்டு தாது மணல் சுரங்கத்திற்கும் கதிர்வீச்சுக்கும் கற்பனையான ஒரு கட்டுக் கதையை உருவாக்கி பொய் பிரச்சாரம் சில ஊடகங்களிலும் சில நபர்களாலும் செய்யப்படுகிறது. கீழ்கண்ட படம் இயற்கையாகவோ, செயற்கையாகவோ தாது மணல் சுரங்க பணியால் எந்த கதிர்வீச்சும் ஏற்படுவதில்லை. யாருக்கும் பாதிப்பு இல்லை என்பதை நிரூபிக்கும்.