இந்திய சுரங்க அமைச்சர் தலைமையில் நடந்த இருவேறு வீடியோ கான்பரன்ஸ்சில் காண்பிக்கப் பட்ட இரண்டு ஸ்லைடுகள் தான் கீழே உள்ளது. இதனை பார்த்தால் ராஜஸ்தானில் மட்டும் 105 மில்லியன் டன்னுக்கும் கூடுதலாக தங்கம் உள்ளது. அதாவது 10 கோடியே 5 லட்சம் டன்னுக்கும் கூடுதலாக தங்கம் நம் நாட்டில் ராஜஸ்தானில் மட்டும் உள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் தற்போதைய மதிப்பு 5800 ரூபாய் ஆகும்.
1980-ல் சீனாவும் இந்தியாவும் ஆண்டுக்கு 3 டன் தங்கம் உற்பத்தி செய்தது. தற்போது சீனா 440 டன்னும் இந்தியா வெறும் 2 டன்னும் தங்கம் உற்பத்தி செய்கிறது. உற்பத்தி குறைவினால் ஆண்டுக்கு 3 லட்சம் கோடி ரூபாய்க்கு இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்கிறது.
இதற்கு காரணம் அரசு மட்டும் அல்ல. தன்னார்வலர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் என்ற போர்வையில் வரும் இந்தியாவை சேர்ந்த வெளிநாட்டு கைகூலிகளும் அவர்களிடம் காசு வாங்கி கொண்டு பொய்யை வெளிப்படுத்தும் ஊடகங்களும் கொள்ளை அடிக்க நினைக்கும் அரசியல்வாதிகள் மற்றும்; அதிகாரிகளும் கூட. நம்மிடம் இருக்கும் செல்வத்தை நம்மை எடுக்க விடாமல் நம்மை வைத்தே தடுத்துக் கொண்டு நம் பணத்தை அன்னிய நாடுகள் வணிகம் என்ற பெயரில் சுருட்டுகின்றன. இது ஒரு உதாரணமே. ஏராளமான கனிம வளங்களை கொண்டுள்ள இந்தியா சரியான திட்டமிடல் மற்றும் செயல்பாடு மூலம் உலகத்திலேயே முதல் பணக்கார நாடாக மாற முடியும். இதற்கு அரசியல்வாதிகள் நேர்மையாக செயல்பட வேண்டும்.