குடும்ப சண்டையில் ஒரு தரப்பிற்கு உதவுவதற்காக காவல் துறையினர் பொய்யான ஒரு குற்ற வழக்கை பதிவு செய்துள்ளார்கள். இதில் சில காவல்துறை உயர் அதிகாரிகளும் சம்பந்தப் பட்டு இருப்பதாக தகவல்கள் வந்தாலும் முழுமையான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை. கிடைத்துள்ள ஆதாரங்கள் தற்போது வெளியிட முடியாத நிலை. ஆனாலும் வேண்டும் என்றே நீதிமன்ற உத்தரவை மீறி இடையூறு செய்ய இந்த குற்ற வழக்கை பதிவு செய்ததால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என விவி டைட்டானியம் நிறுவன நிர்வாக இயக்குனர் அனுப்பிய நீதிமன்ற அவமதிப்பு அறிவிப்பு இந்த வழக்கில் எவ்வாறு அதிகாரிகள் தவறாக உள்நோக்கத்தோடு செயல்பட்டு இருக்கிறார்கள் என்பதை விளக்கும். எனவே அனைவரும் தெரிந்து கொள்வதற்காக அவை கீழே பதிவு செய்யப்படுகிறது.
*******************
அனுப்புனர்
எஸ்.வைகுண்டராஜன்,
மேனேஜிங் டைரக்டர்,
விவி டைட்டானியம் பிக்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்,
கீரைக்காரன்தட்டு,
திசையன்விளை - 627 657
திருநெல்வேலி மாவட்டம்.
பெறுநர்
1. உயர்திரு. மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
தூத்துக்குடி
2. உயர்திரு. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்,
எஸ்.பி. ஆபிஸ்,
தூத்துக்குடி
3. உயர்திரு. கோட்டாட்சியர் அவர்கள்,
கோட்டாட்சியர் அலுவலகம்,
தூத்துக்குடி
4. உயர்திரு. உதவி இயக்குனர் (கனிமம்)
புவியியல் மற்றும் சுரங்கத்துறை,
கலெக்டரேட், தூத்துக்குடி
5. உயர்திரு. தாசில்தார் அவர்கள்,
தாலுகா அலுவலகம், தூத்துக்குடி
6. உயர்திரு. காவல் ஆய்வாளர் அவர்கள்,
சிப்காட் காவல் நிலையம், தூத்துக்குடி
அன்புடையீPர்,
பொருள் : நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதற்கான முன்
அறிவிப்பு பணிந்து சமர்பிக்கப் படுகிறது.
பார்வை : சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு எண்
விவி டைட்டானியம் பிக்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தங்களுக்கு இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்வதற்கான முன் அறிவிப்பு சார்பு செய்யப் படுகிறது.
விவி டைட்டானியம் பிக்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்பது டைட்டானியம் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும். இது தூத்துக்குடி சிப்காட் தொழிற்பேட்டையினுள் உள்ளது. இதற்கு தேவையான மூலப்பொருளான இல்மனைட் உள்நாட்டில் உள்ள சுரங்க குத்தகைதாரர்களிடம் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கொள்முதல் செய்து டைட்டானியம் உற்பத்தி செய்யப் படும். விவி டைட்டானியம் பிக்மெண்ட்ஸ் நிறுவனத்தின் பெயருக்கு எந்த ஒரு சுரங்க குத்தகையும் கிடையாது. எம்எம்டிஆர் சட்டம் என்பது பெருங்கனிமம் மற்றும் சிறு கனிம சுரங்கங்களை மேம்படுத்தவும் ஒழுங்கு படுத்தவும் இயற்றப் பட்டது ஆகும். இதன்படி உரிய சுரங்க குத்தகை இன்றி சுரங்க பணி மேற்கொள்வதோ அல்லது உரிய அனுமதியின்றி போக்குவரத்து செய்வதோ கூடாது என உள்ளது. இது இந்தியாவில் சுரங்க பணி செய்யும் இனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
தமிழ்நாடு கனிமங்கள் சட்ட விரோதமாக தோண்டியெடுத்தல்;, கொண்டு செல்லுதல் மற்றும் இருப்பகத்தில் வைத்தல் தடுப்பு மற்றும் கனிம வணிகர்கள் விதிகள் 2011, விதி 3(1) மற்றும் 3(2)-ன் படி
விதி 3 தடை
(1) "எந்தவொரு நபரும் கனிமத்தை வெட்டி எடுக்கும் இடத்திலிருந்து அல்லது இருப்புக் கிடங்கிலிருந்து அல்லது ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு சரக்கு ஊர்தி மூலம் செல்லத்தக்க இடங்கடப்பு அனுமதி சீட்டு இன்றி கொண்டு செல்லுதல் கூடாது அல்லது கொண்டு செல்ல செய்தல் கூடாது.
(2) கனிம வணிகர் அல்லாத வேறு எந்தவொரு நபரும் கனிமத்தை விற்பனை அல்லது பயன்படுத்தல் நோக்கத்திற்காக ஏதேனும் ஒரு இடத்தில் இருப்பில் வைக்கவோ அல்லது வைக்குமாறு செய்தலோ கூடாது.
As per the section 4(1A) of Mines and Minerals (Development and Regulation) Act, 1957, “[No person shall transport or store or cause to be transported or stored any mineral otherwise that in accordance with the provisions of this Act and rules made thereunder]”.
மேற்படி சட்டம் மற்றும் விதிகளின் படி கனிமத்தை சேமித்து வைப்பதற்கு சேமிப்பு கிடங்கு உரிமம் பெறப்பட வேண்டும். தி/வா.விவி டைட்டானியம் பிக்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சேமிப்பு கிடங்கு உரிமம் நாளது தேதி வரை மேற்கண்ட உரிமம் பெறப்படவில்லை என கூறி ஏற்கனவே கடந்த ஆண்டு மாவட்ட ஆட்சியர் அறிவுரை படி கிராம நிர்வாக அதிகாரியிடம் புகார் மனு பெற்று சிப்காட் காவல் நிலையத்தில் குற்ற எண் 441 of 2019 என ஒரு குற்ற வழக்கு பதிவு செய்யப் பட்டது. எங்களுக்கு சுரங்க குத்தகை இல்லாததாலும், நாங்கள் இறக்குமதி செய்யும் கனிமத்தை உபயோகிப்பதாலும், மேற்கண்ட விதிகள் எங்களுக்கு பொருந்தாது என்பதை குறிப்பிட்டு அதிகாரிகளிடம் முறையிட்டோம். யாரும் அதனை பொருட்படுத்தாத நிலையில் 1-ம் பிரதிவாதியான தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் நேரடியாகவோ அல்லது சார் நிலை அலுவலர்கள் மூலமோ நாங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் கனிமங்களை பொருத்து இறக்குமதி செய்யவோ, போக்குவரத்து செய்யவோ, இருப்பு வைக்கவோ அல்லது அதனை உபயோகிப்பதோ போன்ற பணிகளுக்கு எந்த வகையிலும் இடையூறு செய்யக் கூடாது என்ற கோரிக்கையோடு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மத்திய அரசு அதிகாரிகளை பிரதிவாதிகளாக சேர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிப்பேராணை W.P.(MD) No. 24396 of 2019 தாக்கல் செய்தோம். அதற்கு மாவட்ட ஆட்சி தலைவர் தரப்பில் எதிர் உரையும் தாக்கல் செய்யப் பட்டது.
இல்மனைட் கனிமத்தை இறக்குமதி செய்யும் போது கனிம கப்பலை அனுமதிக்க கூடாது என மாவட்ட ஆட்சி தலைவர் கேட்டுக் கொண்ட படி தூத்துக்குடி துறைமுக சபை பொது மேலாளர் கப்பலை அனுமதிக்க மறுத்தார். இதன் தொடர்ச்சியாக சென்னை உயர்நீதிமன்றம் W.P.(MD) No. 22615 of 2019 & W.MP. (MD) No. 19371 of 2019 dated 24.10.2019 என்ற உத்தரவின் படி கப்பலை அனுமதிக்க உத்தரவிட்டது. மேற்கண்ட வழக்கிலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் எதிர் மனுதாரர்கள். மீண்டும் கனிமத்தை எடுத்து செல்வதை அனுமதிக்காததால் உயர்நீதிமன்றத்தை அணுகி உயர்நீதிமன்ற உத்தரவு W.P.(MD) No. 22615 of 2019 & W.M.P.(MD) No. 19738 of 2019 dated 31.10.2019 உத்தரவு படி துறைமுகத்தில் இருந்து சரக்குகளை எடுத்து செல்ல அனுமதி கொடுத்த விபரம் பதிவு செய்யப் பட்டு மனுதாரர் மேலும் குறை இருந்தால் அவர் மனுவை திருத்தி சமர்பிக்கலாம் என்ற அனுமதியோடு உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட படி சரக்குகள் அனுமதிக்கப் பட்டது.
மேற்கண்ட இரண்டு வழக்குகளையும் ஒன்றாக விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அந்த வழக்குகளில் தீர்ப்பு வழங்கும் போது சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே ராமையா என்டர்பிரைசஸ் எதிர் மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி என்ற வழக்கில் எம்.எம்.டி.ஆர் சட்டப்படி மாவட்ட ஆட்சியருக்கு கொடுத்துள்ள அதிகாரம் சிறு கனிமங்கள் என அறிவிக்கை செய்யப் பட்ட கனிமங்களை பொறுத்து குத்தகை வழங்குவது, ஒழுங்கு படுத்துவது ஆகியவற்றிற்கு தான் அதிகாரம் உண்டே தவிர இறக்குமதியில் தலையிட அதிகாரம் கிடையாது என்றும், அதேபோல் The Tamil Nadu Prevention of Illegal Mining Transportation and Storage of Minerals and Mineral Dealers’ Rules, 2011 என்பது சட்ட விரோதமாக குவாரி செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டு பதுக்கி வைக்கப்படுவதற்கு தான் பொருந்தும் என்றும், இறக்குமதி செய்யப்பட்ட கனிமத்தை பொறுத்தவரையில் இந்த சட்ட விதிகள் செல்லாது என்றும் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் தீர்மானித்து உள்ளதை சுட்டி காட்டி எனவே கனிம இறக்குமதியை அனுமதிக்க வேண்டும் என W.P.(MD) No. 22615 of 2019 and W.M.P. (MD) No. 19371 of 2019 என்ற வழக்கில் 24.10.2019 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையிலேயே கனிமங்கள் துறைமுகத்திற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
எனவே கனிமங்கள் சட்டப்படி மட்டும் அல்ல உயர்நீதிமன்ற உத்தரவோடு இறக்குமதி செய்யப் பட்டு விவி டைட்டானியம் பிக்மெண்ட் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டவை ஆகும். மேலும் சட்டவிரோதமாக குவாரி செய்தால் மட்டுமே போக்குவரத்து மற்றும் இருப்பு வைத்தல் என்ற தமிழ்நாட்டின் மேற்கண்ட விதி பொருந்தும் என்பதையும் சென்னை உயர்நீதிமன்றம் W.P.(MD) NO. 20020 of 2017 dated 29.11.2017 வழக்கில் தீர்மானித்து உள்ளதை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு நாள் 24.10.2019-ல் தெரியப்படுத்தி உள்ளது.
இந்த கனிமங்கள் உயர்நீதிமன்ற உத்தரவோடு இறக்குமதி செய்யப் பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளவை. அந்த வழக்குகளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மட்டும் அல்ல திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மற்றும் சுங்கத்துறை ஆணையாளர், தூத்துக்குடி துறைமுக சபை ஆகியோரும் பிரதிவாதி ஆகும்.
இதற்கிடையில் நாங்கள் இறக்குமதி செய்த இல்மனைட்டை உபயோகிப்பதையோ மேலும் இல்மனைட்; இறக்குமதி செய்து, போக்குவரத்து செய்தல், இருப்பு வைத்தல் அல்லது உபயோகித்தல் போன்ற எந்த பணிகளிலும் மாவட்ட ஆட்சியர் நேரடியாகவோ அல்லது அவரது சார்நிலை அலுவலர்கள் மூலமோ தலையீடு செய்வதை தடுத்து நிறுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் W.P.(MD) No. 24396 of 2019 என ஒரு வழக்கு மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி, மற்றும் மத்திய அரசு அதிகாரிகளையும் பிரதிவாதிகளாக காட்டி தாக்கல் செய்தோம்.
மேற்கண்ட இரண்டு வழக்கையும் ஒன்றாக விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 27.02.2020 அன்று இறுதி தீர்ப்பை வழங்கியது. மேற்கண்ட தீர்ப்பில் நாங்கள் இறக்குமதி செய்துள்ள இல்மனைட் என்பது தடையின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்கப் பட்ட இனம் என்பதையும், இறக்குமதிக்கு மாவட்ட ஆட்சியர் துறைமுக சபை மூலம் தடை விதித்ததால் உயர்நீதிமன்ற உத்தரவோடு இறக்குமதி செய்யப் பட்டதையும், துறைமுக சபையில் இருந்து போக்குவரத்து செய்ய அனுமதிக்காததால் மீண்டும் உயர்நீதிமன்ற உத்தரவோடு துறை முக சபையில் இருந்து கொண்டு செல்லப்பட்டதையும் குறிப்பிட்டு உள்ளார்கள். மேலும் மேற்படி உத்தரவின் பத்தி 6-ல் இந்த வழக்கில் இறக்குமதி செய்யப்படும் கனிமங்களுக்கு எம்.எம்.டி.ஆர் சட்டம் பொருந்தாது என்பதையும், இந்தியாவில் மைனிங் செய்வதற்கு தான் மேற்கண்ட சட்டம் பொருந்தும் என்பதையும் மேலும் The Tamil Nadu Prevention of Illegal Mining Transportation and Storage of Minerals and Mineral Dealers’ Rules, 2011 என்பது எம்.எம்.டி.ஆர் சட்டம் பிரிவு 15 மற்றும் பிரிவு 23சி-யின் கீழ் பிறப்பிக்கப் பட்டது என்றும் இந்திய உச்சநீதிமன்றம் குஜராத் மாநில அரசு எதிர் ஜெயசுபாய் கன்சிபாய் கலத்தியா என்ற வழக்கில் எம்.எம்.டி.ஆர் சட்டம் பிரிவு 23சி-யின் கீழ் பிறப்பிக்கப்படும் விதிகள் இல்லீகல் மைனிங் இனத்திற்கு தான் பொருந்தும் என தெளிவாக உத்தரவிட்டு உள்ளதையும் அந்த உச்சநீதிமன்ற உத்தரவை அடியொற்றி சென்னை உயர்நீதிமன்றமும் ராமையா என்டர்பிரைசஸ் எதிர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் என்ற இனத்தில் உத்தரவு பிறப்பித்து உள்ளதையும் குறிப்பிட்டு இறுதியில் எம்.எம்.டி.ஆர் சட்டம் என்பதே இந்திய யூனியன் நிலப்பரப்பிற்குள் மைனிங், பிராஸ்பெக்டிங் ஆகியவற்றை அமுல் படுத்த பிறப்பிக்கப் பட்டது. இந்தியாவிற்கு வெளியே மைனிங் செய்யப் பட்ட கனிமங்களுக்கு மேற்கண்ட சட்டம் பொருந்தாது என்பதை குறிப்பிட்டு எனவே மாவட்ட ஆட்சி தலைவரோ அவரது வகையாட்களோ கனிமங்களை இறக்குமதி செய்யவோ, போக்குவரத்து செய்யவோ, கையிருப்பு வைக்கவோ, அதனை உபயோகப்படுத்தவோ இடையூறு செய்யக் கூடாது என்று கடந்த 27.02.2020 அன்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
எம்.எம்.டி.ஆர் சட்ட விதிகளுக்கு விதிமீறல் இருந்தால் கூட மாவட்ட ஆட்சியர் தான் மேற்கண்ட சட்ட பிரிவு 22 படி நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்யலாம். மாவட்ட ஆட்சியர் அல்லாத இதர நபர்கள் தாக்கல் செய்த புகார் செல்லுபடியாகக் கூடியது அல்ல என கூறி ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் Crl.O.P. (MD) NO. 5415 of 2011 and M.P.No. 1,2 & 3 of 2011 dated 16.06.2011 வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.
மேற்கண்ட விபரங்களையும் உயர்நீதிமன்ற உத்தரவையும் சிப்காட் காவல்துறை ஆய்வாளர் அவர்களுக்கும், ரூரல் டி.எஸ்.பி அவர்களுக்கும் கடந்த 13.03.2020 அன்று பதிவு அஞ்சல் மூலம் சமர்பித்து ஒப்புகையும் பெற்றுள்ளோம். மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவு நகல் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றத்தில் இருந்தே நேரடியாகவும் அனுப்பப் பட்டுள்ளது. எனவே இவ்வாறு உத்தரவு இருப்பது உங்கள் அனைவருக்கும் தெளிவாக தெரியும்.
எங்கள் விவி டைட்டானியம் பிக்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ஜிஎஸ்டி பதிவுகளின் படி A1, Harbour Express Highway Road என்பதும் ஒரு வணிக இடம் ஆகும். இறக்குமதி செய்யப் பட்ட கனிமத்திற்கு எம்.எம்.டி.ஆர் சட்டம் மற்றும் போக்குவரத்து விதிகள் பொருந்தாது என்பதால் அந்த சட்டப்படி உள்ள எந்த போக்குவரத்து சீட்டும் தேவையில்லை என்பதும் உங்களுக்கு தெரியும். மேலும் The Tamil Nadu Prevention of Illegal Mining Transportation and Storage of Minerals and Mineral Dealers’ Rules, 2011 என்பது எம்எம்டிஆர் சட்டம் பிரிவு 23சி படி பிறப்பிக்கப் பட்டது என்பது மேற்கண்ட விதிகளின் அறிவிக்கையிலேயே முதலிலேயே குறிப்பிடப் பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய உச்சநீதிமன்றம் பிரிவு 23சி படி உள்ள விதிகள் இல்லீகல் மைனிங்கிற்கு தான் பொருந்தும் என தீர்ப்பளித்த பிறகு அதனையும் சுட்டிக்காட்டி உயர்நீதிமன்றமும் கடந்த 27.02.2020 அன்று தீர்ப்பளித்த பிறகு தாங்கள் வேண்டும் என்றே காவல் துறை, வருவாய் துறை உதவியோடு எங்கள் ஒரு வணிக இடத்தில் இருந்து இன்னொரு வணிக இடத்திற்கு அமுலில் உள்ள சட்டமான ஜிஎஸ்டி சட்டப்படி Eway Bill மூலம் கொண்டு செல்லும் போது தாங்கள் தடுத்து நிறுத்தி ஐந்து வாகனங்களை கைப்பற்றி சென்றுள்ளீர்கள். மேலும் எங்களது வணிக இடத்திற்கு தங்கள் சார் நிலை அலுவலர்கள் மூலம் பூட்டு போட்டு முத்திரையும் வைத்துள்ளீர்கள். தாங்கள் செய்த சட்ட விரோத செயலை நியாயப் படுத்துவதற்காக இவை ஏற்கனவே சீல் வைக்கப் பட்ட கிட்டங்கியில் இருந்து திருடப் பட்டு இருக்கலாம் என சில சார் நிலை அலுவலர்களிடம் புகார் பெற முயற்சி செய்வதாகவும் தெரிய வருகிறது.
உண்மையில் அதிகாரிகளால் அதாவது வட்டக்குழு மூலம் தூத்துக்குடி வட்டம், முள்ளக்காடு பகுதி 1 கிராமம், 4/160டி, ஹார்பர் கன்ஸ்ட்ரக்சன் ரோடு, தூத்துக்குடி என்ற முகவரியில் உள்ள கிட்டங்கி 25135.635 மெட்ரிக் டன் கார்னட் மணலோடு இரண்டு பூட்டுகள் கொண்டு பூட்டப் பட்டு ஒரு சாவி வட்டக்குழுவிடமும், ஒரு சாவி நிறுவனத்திடமும் கொடுத்து கடந்த 23.03.2017 அன்று சீல் வைக்கப் பட்டது. மேற்கண்ட இடம் முற்றிலும் தனியானது. அதற்கும் தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிப்பேராணை மனு தாக்கல் செய்யப் பட்டு அந்த வழக்கும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதிலும் மாவட்ட ஆட்சியர் எதிர் மனுதாரர்.
இதற்கிடையில் விவி குரூப் நிறுவன பங்குதாரர்களிடையே ஏற்பட்ட பிரச்சனையில் சமரச தீர்வர் முன்னிலையில் ஏற்பட்ட குடும்ப ஏற்பாட்டின் படி 31.12.2018 தேதியிட்ட கைத்தடி பாகப்பிரிவினை பத்திரம் தயாரிக்கப் பட்டு; மேற்கண்ட சீல் வைக்கப் பட்ட கிட்டங்கி அமைந்துள்ள புல எண் 262/2 (கைத்தடி பாகப்பிரிவினை பக்கம் எண் 70) திரு.எஸ்.ஜெகதீசன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு என்றும், விவி டைட்டானியம் நிறுவனம் மற்றும் டைட்டானியத்தின் வணிக இடமான ஹார்பர்எக்ஸ்பிரஸ் ரோடு கிட்டங்கி திரு.எஸ்.வைகுண்டராஜன் குடும்பத்தினருக்கு என்றும் முடிவு செய்யப் பட்டு அவ்வாறே இருதரப்பும் மேற்கண்ட பாகப்பிரிவினை பத்திரத்தில் கையொப்பம் இட்டு உறுதி செய்த நிலையில் சில காலம் கழித்து மேற்கண்ட கைத்தடி பாகப்பிரிவினை பத்திர செயல்பாட்டை நிறுத்தி வைக்கவும், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியை சமரச தீர்வராக நியமித்து பாகப்பிரிவினை செய்யவும் கேட்டு திரு.எஸ்.ஜெகதீசன் மற்றும் அவரது குடும்பத்தினர் மொத்தம் எட்டு மனுக்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
31.12.2018-ம் தேதிய கைத்தடி பாகப்பிரிவினை பத்திரத்தில் திரு.எஸ்.ஜெகதீசன் தரப்பினர் கையொப்பம் இட்டார்கள் என்பதை அவர்களே உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அபிடவிட் மனுவில் தெரிவித்துள்ளார்கள். இருதரப்பு ஆவணங்களையும் பார்வையிட்ட சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்யும் போது கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.
The Hon’ble High Court has clearly mandates in para 10 of the Judgement that, “Thus, when the partition deed is rightly executed by all, the same is valid and the question of cancellation of the same also does not arise.”
The Hon’ble High Court further mentioned in its judgement in para 14, “If the partition deed document is accepted as a result of the conciliation proceedings and accepted as an award, the same can be assailed only in a proceedings initiated under section 34 of the A & C Act. If it is not accepted as a conciliation award, the document still would retain its character as a partition deed” .
The Hon’ble High Court further mentioned in its judgement in para 16,
“in the case on hand, after arriving at the settlement all the parties have signed the partition deed which is not in dispute”.
It also observed in 19th para that, if at all the same to be challenged, the same can be done only before the Civil Court and not by invoking Section 11 or 9 of A & C Act.
மேற்கண்ட முடிவுகளோடு எட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் போது …. NghJ …. “Unless and until the document is set aside in the manner known to law, they cannot attack the validity or otherwise of the same in the present proceedings” – என்ற முடிவோடு சென்னை உயர்நீதிமன்றம் திரு.எஸ். ஜெகதீசன் தாக்கல் செய்த எட்டு மனுக்களையும் O.P.Nos 372 to 374, 380 to 382 and 384 of 2019 and O.A.No. 543 of 2019 dated 06.09.2019 O.P.Nos 372 to 374, 380 to 382 and 384 of 2019 and O.A.No. 543 of 2019 dated 06.09.2019 படி தள்ளுபடி செய்தது. இதனை தாங்கள்
https://www.mhc.tn.gov.in/
மேற்கண்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து திரு.எஸ்.ஜெகதீசன் இந்திய உச்சநீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனு தாக்கல் செய்தார்.
“We are not inclined to interfere with the impugned order(s) in exercise of our jurisdiction under Article 136 of the Constitution of India. The special leave petitions are accordingly dismissed” என்ற உத்தரவோடு உச்சநீதிமன்றம் மேற்கண்ட சிறப்பு அனுமதி மனுவை SLP (Civil) diary No. 36699 of 2019 dated 21.10.2019 படி தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்ற உத்தரவு இத்துடன் ஆஜர். இதனை தாங்கள் https://main.sci.gov.
மேலும் உச்சநீதிமன்றத்திலேயே மீண்டும் ஒரு சீராய்வு மனுவையும் காலதாமதத்தோடு தாக்கல் செய்தார். மேற்கண்ட சீராய்வு மனுவும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது காலதாமதத்தை மன்னித்து ஏற்றுக் கொண்டு உச்சநீதிமன்ற உத்தரவில் எந்த தவறும் இல்லை. எனவே சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என குறிப்பிட்டு Review Petition (Civil No) --- of 2020 in diary No. 2203 of 2020 in SPECIAL LEAVE PETITION(CIVIL) NOS.25250-25256 OF 2019 நாள் 9.6.2020 படி தள்ளுபடி செய்யப் பட்டது. இதனை தாங்கள் https://main.sci.gov.
C பட்டியலில் உள்ள சில சொத்துக்கள் திரு.எஸ்.ஜெகதீசன் குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் இருப்பதாலும் அவர்களுடன் உள்ள நல்லுறவு நீங்கியதாலும், ஆவண மாற்றத்திற்கும், நிர்வாக மாற்றத்திற்கும் கேட்டு திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மூன்று மனுக்களை E.P. NO.s 61, 62, 63 of 2019 என தாக்கல் செய்திருந்தோம். மேற்கண்ட மூன்று மனுக்களையும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் விசாரிக்க கூடாது என கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திரு.எஸ்.ஜெகதீசன் தரப்பு மூன்று வழக்குகளை தாக்கல் செய்தது. மேலும் மேற்கண்ட வழக்கில் ஏராளமான இடைக்கால மனுக்களையும் தாக்கல் செய்தனர். அதில் ஒரு இடைக்கால மனு இந்த கைத்தடி பாகப்பிரிவினை பத்திரம் போலியாக தயாரிக்கப் பட்டது என்றும் எனவே இதற்கு குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேலும் சில ஆவணங்களை கைப்பற்ற வேண்டும் என்றும் ஏராளமான கோரிக்கையோடு மனுக்கள் தாக்கல் செய்தார்கள். இடைக்கால தடை பிறகு நிரந்தர தடையாக மாற்றப் பட்டு இறுதி விசாரணைக்கு பட்டியல் இடப் பட்டது. மேற்கண்ட நிரந்தர தடையை பயன்படுத்தி என் தரப்பிற்கு உரிமை உள்ள நிறுவனங்களில் இருந்து விலை மதிப்பு உள்ள பொருட்கள் எல்லாம் வேண்டும் என்றே திரு.எஸ்.ஜெகதீசன் தரப்பால் எடுத்து செல்லப் பட்டது. எனவே இது பற்றி நான் சென்னை உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று எனக்கு உரிமை உள்ள C பட்டியலில் உள்ள சொத்துக்கள் தற்போது திரு.எஸ்.ஜெகதீசன் கட்டுப்பாட்டில் இருப்பவற்றிற்கு உயர்நீதிமன்றத்தில் இருந்தே ஒரு ரிசீவர் நியமிக்க வேண்டும் என மனு செய்தேன். மேற்கண்ட மனு விசாரணையின் போது திரு.எஸ்.ஜெகதீசன் தரப்பு சீராய்வு மனுவின் இறுதி விசாரணையையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என வாதிட்டது. அதற்கு எங்கள் தரப்பில் சம்மதம் தெரிவித்ததால் எல்லா மனுக்களும் சேர்ந்து இறுதி விசாரணை நடந்தது. இறுதியில் சென்னை உயர்நீதிமன்றம் திரு.எஸ்.ஜெகதீசன் தரப்பு தாக்கல் செய்த எல்லா இடைக்கால மனுக்களையும் தள்ளுபடி செய்ததோடு நாங்கள் கோரியவாரே C பட்டியலில் உள்ள எங்கள் தரப்பு சொத்துக்கள் திரு.எஸ்.ஜெகதீசன் குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துக்களுக்கு ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் திருமதி விமலா அவர்களை ரிசீவராக நியமித்தும் அவருக்கு உதவியாக வழக்கறிஞர்கள் திரு.சித்தார்த்தன் மற்றும் திரு.சாமுவேல் குணசிங் ஆகியோரை உதவியாளர்களாக நியமித்தும் ஆணை பிறப்பித்தது.
மேற்கண்ட உத்தரவிலேயே திரு.எஸ்.ஜெகதீசன் தரப்பு தாக்கல் செய்த மெயின் வழக்குகளையும் தள்ளுபடி செய்ததோடு ஏற்கனவே உயர்நீதிமன்றம் நியமித்த மத்தியஸ்தர்களான ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி நீதியரசர் திரு.சிவராஜ் பாட்டில் மற்றும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திரு. கண்ணன் ஆகியோரும் மூன்று மாத காலம் சமாதானம் பேசவும், மூன்று மாத காலத்திற்குள் சமாதானம் முடியாவிட்டால் மாவட்ட நீதிமன்றம் மூன்று மாதம் கழித்து நிறைவேற்றுதல் மனுக்களில் (EP.Nos. 61, 62, 63 of 2019) நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் CRP(MD)Nos.1797 to 1799 of 2019 and connected miscellaneous petitions dated 08.04.2021 CRP(MD)Nos.1797 to 1799 of 2019 and connected miscellaneous petitions dated 08.04.2021 படி உத்தரவு பிறப்பித்துள்ளது.
உயர்நீதிமன்றத்தின் மேற்கண்ட உத்தரவை எதிர்த்து திரு.எஸ்.ஜெகதீசன் தரப்பு இந்திய உச்சநீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனு தாக்கல் செய்தது. அந்த மனுவும் 04.05.2021 அன்று உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப் பட்டு விட்டது. எனவே சீல் வைக்கப் பட்ட கிட்டங்கி திரு.எஸ்.ஜெகதீசன் கட்டுப்பாட்டில் அவருக்கு உரிமை உள்ளது ஆகும். அதில் ஏதேனும் தவறு நடந்து இருந்தாலும் அதற்கு எஸ்.ஜெகதீசன் தான் பொறுப்பு ஆவாரே தவிர எங்களுக்கு பொறுப்பு ஆகாது. ஆனால் உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்கில் தோல்வி அடைந்ததால் குறுக்கு வழிகளை கையாண்டு சில நபர்களை கூலிக்கு அமர்த்தி எங்களுக்கு எதிராக பொய் புகார் கொடுப்பதையும், அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பொய்யான தகவல் கொடுப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளார். அவ்வாறு யாரோ ஒருவர் சீல் வைக்கப் பட்ட கிட்டங்கியில் இருந்து திருடி செல்லப்பட்ட சரக்கு என கூறியதாக கூறி அதிகாரிகள் நாங்கள் சட்டப்படி தொழில் செய்யும் இடத்தில் இருந்து சரக்குகளை எடுத்து சென்றதோடு மட்டும் இன்றி இருக்கும் சரக்கிற்கும் சீல் வைத்து விட்டார்கள். இதனால் தொழிற்சாலையை இயக்க முடியாமலும், தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க முடியாமலும் உள்ள நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இதனால் ஏற்படும் இழப்பீடுகளுக்கு நீங்கள் அனைவருமே பொறுப்பு.
சீல் வைத்த இடம் எது? அவ்வாறு சீல் வைக்கும் போது பிறப்பித்த அத்தாட்சி என்ன? எந்தெந்த அதிகாரிகள் சீல் வைத்தார்கள்? யார் முன்னிலையில் சீல் வைக்கப் பட்டது? எந்த தேதியில் சீல் வைக்கப் பட்டது? என்பன போன்ற எந்த தகவலையும், அல்லது ஆதாரத்தையும் பரிசீலனை செய்யாமலும், ஆஜர் செய்யாமலும் எங்களுக்கு இடையூறு செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு நீங்களும் கட்சியாக இருந்த வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நீங்கள் தெரிந்தே வேண்டும் என்றே மீறி உள்ளீர்கள். இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.
மேலும் கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் வாங்கும் போது திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் உயர்மட்ட குழு ஆய்வு செய்து சரக்கை எடுக்காமல் அப்படியே வைக்க வேண்டும் என பூட்டி சீல் வைத்ததாகவும், அந்த உத்தரவை மீறி எடுத்ததாகவும் தவறான ஒரு புகார் மனுவை வேண்டும் என்றே தாங்கள் பெற்றுள்ளீர்கள்.
உண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழகம் முழுவதும் உள்ள கனிம இருப்புகள் எவ்வளவு என்பதை கணக்கீடு செய்து அறிக்கை செய்ய அதன் 17.01.2017 தேதிய உத்தரவில் உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் தமிழக அரசு அரசாணை 29 படி திரு. மகேசன் காசிராஜன், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் ஒரு கமிட்டியை கனிமங்களை கணக்கீடு செய்ய நியமித்தது. பிறகு மேற்கண்ட அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை எண் 41 நாள் 7.4.2017 படி திரு.சத்தியபிரதாசாகு, இ.ஆ.ப தலைமையில் ஒரு கமிட்டியை நியமித்தது. மேற்கண்ட அரசாணையிலேயே மூன்று மாவட்டங்களிலும் எல்லா இடங்களிலும் இருக்கும் கனிமங்களை கணக்கீடு செய்ய இந்த கமிட்டி நியமிக்கப் படுகிறது என்பதை குறிப்பிட்டே அரசாணை பிறப்பிக்கப் பட்டது. மேலும் கனிம சட்டம் பிரிவு 23(B) மற்றும் 24 படி அந்த கமிட்டிக்கு அதிகாரம் கொடுக்கப் பட்டது. அவையும் சோதனை செய்யவும், ஆய்வு செய்யவும் கொடுக்கப் பட்ட அதிகாரமே தவிர வேறு இல்லை. இவை அனைத்தும் தங்கள் அனைவருக்கும் தெரியும். ஏனென்றால் மேற்கண்ட கமிட்டியினர் ஆய்வு செய்யும் போது வருவாய் துறை, காவல் துறை அலுவலர்கள் அனைவரும் உடன் வந்திருந்தார்கள்.
எனவே அரசின் உயர் மட்ட குழு எந்த கனிமங்களையும் கைப்பற்றவில்லை என்பதும், எந்த இடத்திற்கும் சீல் வைக்கவில்லை என்பதும் தங்களுக்கு தெரியும். இதன் தொடர்ச்சியான அறிக்கைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தே அனுப்பவும் பட்டன. அதுவும் சாகு கமிட்டி அறிக்கையில் துலங்கும். ஆனால் இந்த உண்மைகளை எல்லாம் மறைத்து நீதிமன்ற தீர்ப்பை மீறி எங்களது விவி டைட்டானியம் பிக்மெண்ட்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலையின் ஒரு பகுதியாக பதிவு செய்யப் பட்டுள்ள A1, Harbour Express Highway Road என்ற இடத்தில் இருந்து எங்கள் தொழிற்சாலைக்கு தற்போது நடைமுறையில் உள்ள ஜிஎஸ்டி சட்டப்படி உள்ள நறயல டிடைட போட்டு கொண்டு செல்லப் பட்ட கனிமங்களை உயர்நீதிமன்றத்தின் மேலே கூறிய உத்தரவை மீறுவதற்காக புதிதாக ஒரு கிராம நிர்வாக அதிகாரியை வைத்து புதிதாக ஒரு புகாரை கொடுக்க வைத்து அதில் இந்திய தண்டனை சட்ட பிரிவுகளையும் வேண்டும் என்றே சேர்த்து தாங்கள் இந்த குற்ற வழக்கை பதிவு செய்து எங்களது கிட்டங்கியில் இருந்து நாங்கள் இல்மனைட்டை எடுத்து செல்வதை தடுக்கும் முகமாக தங்கள் சார் நிலை அலுவலர்கள் மூலம் பூட்டி சீல் வைத்துள்ளீர்கள். மேற்கண்ட இடம் உயர் மட்ட குழு அதிகாரிகள் ஆய்வு செய்யும் போது காலியாக உள்ளது என்பதை ஏற்கனவே மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கையாக சமர்பித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கையும், சாகுகமிட்டி அறிக்கையோடு இணைக்கப் பட்டு உயர்நீதிமன்றத்திலும் சமர்பிக்கப் பட்டுள்ளது. எனவே இந்த புகார் உயர்நீதிமன்றம் நாங்கள் இல்மனைட்டை இறக்குமதி செய்வதையோ, எடுத்து செல்வதையோ, இருப்பு வைப்பதையோ, உபயோகிப்பதையோ மாவட்ட ஆட்சியர் எந்த முறையிலும் தடை செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் W.P.No. 24396 of 2019 dated 27.02.2020 -ல் பிறப்பித்த உத்தரவை மீறுவதற்காக உங்களது சொந்த ஆவணங்களுக்கு விரோதமாக பொய்யாக கொடுக்கப் பட்ட புகார் ஆகும். இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.
எனவே தாங்கள் தொடர்ந்த நடவடிக்கைகளை மூன்று தினங்களுக்குள் கைவிட்டு இதனால் ஏற்பட்ட இழப்பீடுகளுக்கு உரிய ஏற்பாடு செய்யாத பட்சத்தில் உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பதோடு இழப்பீடுகளுக்கும் நீங்களே பொறுப்பு என்று இழப்பீடு பெறுவதற்கும் தனியாக ஒரு வழக்கு தொடரப்படும் என்பதும் இதன் மூலம் தெரிவிக்கப் படுகிறது.
நன்றி
தங்கள் உண்மையுள்ள
எஸ்.வைகுண்டராஜன்
மேனேஜிங் டைரக்டர்
விவி டைட்டானியம் பிக்மெண்ட்ஸ்
பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்காக