91% -ல் இருந்து 8% - ஆக குறைந்த தமிழகத்தின் கார்னட் உற்பத்தி. அரசின் இந்த வருவாய் இழப்பிற்கு காரணமான அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை?
தனியார் கடலோர கனிம இயக்கங்கள் நிறுத்தி வைப்பதற்கு முன்பு அகில இந்திய அளவில் மொத்த உற்பத்தியில் சுமார் 92 சதவீதம் தமிழ்நாடு மாநிலம் உற்பத்தி செய்தது. இதனால் வேலை வாய்ப்பு அரசுக்கு வருவாய் அனைத்தும் அதிகமாக கிடைத்தது தமிழ்நாட்டிற்கு. ஆனால் அந்நிய சக்திகளின் சதி செயலாலும், உள்ளுர் குடும்ப போட்டியாளர்களின் பொய் புகார்களாலும் தமிழகத்தில் தனியார் சுரங்க குத்தகை இயக்கம் நிறுத்தி வைக்கப் பட்ட பிறகு தமிழகத்தின் கார்னட் உற்பத்தி 8 சதவீதமாக குறைந்து விட்டது. இதனை இந்திய அரசு சுரங்கத்துறை வெளியிட்டுள்ள இந்தியன் மினரல் இயர் புக் வெளியீட்டில் காணலாம். தமிழக அரசை நிதி நெருக்கடியில் இருந்து மீட்க தாது மணல் தொழில் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த பட்டியல் நிரூபிக்கும்.
Source : From Indian Mineral Year book published by Ministry of Mines.