Friday, 21 July 2023

எல்லாவற்றிலும் முத்திரை பதிக்கும் விவி மினரல் அண்ணாச்சி நிர்வாகம்

 உலக அளவில் தாதுமணல் கையிருப்பில் மூன்றில் ஒரு பங்கை வைத்திருக்கும் இந்தியா, உற்பத்தியில் உலக அளவில் 14-வது இடத்தில் இருந்தது. விவி மினரல் நிறுவனம் உற்பத்தியை தொடங்கி ஏற்றுமதியை ஆரம்பித்த பிறகு இந்தியா படிப்படியாக முன்னேறி 9, 7, 5, 3, 2, 1 என உலக அளவில் முதல் இடத்தை தொடர்ந்து கைப்பற்றி வந்தது. அந்நிய சதியால் இந்த தொழில் முடக்கப் பட்டதால் எங்களை போன்ற பல ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப் பட்டதோடு இந்தியாவும் உலக அளவில் தாதுமணல் உற்பத்தியில் மீண்டும் 7-வது இடத்திற்கு சென்று விட்டது. 






இந்திய ஆட்சி பணிக்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்தோடு எங்கள் நிர்வாகம் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜா அருகில் உள்ள ஆதி பொறியியல் கல்லூரியை எடுத்து நிர்வாகத்தை அண்ணாச்சியின் மருமகன் திரு. சரண்ராஜ் அவர்கள் வசம் ஒப்படைத்தார்கள். இந்த கல்லூரி 2015-ல் எடுக்கப் படும் போது 364-வது இடத்தில் இருந்தது. 2016-ல் 231, 2017-ல் 134, 2018-ல் 48, 2019-ல் 15, 2022-ல் 11-வது இடம் என படிப்படியாக முன்னேறிக் கொண்டே வருகிறது. பிரபலமான நிறுவனங்களின் பொறியியல் கல்லூரிகள் மற்றும் ஏராளமான அரசு பொறியியல் கல்லூரிகளும் எங்கள் நிறுவன நிர்வாக கல்லூரிக்கு பின்னாலேயே இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாகவே உள்ளது. முழு பட்டியல் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

ஆதி பொறியியல் கல்லூரி பற்றி மேலதிக விபரம் வேண்டுவோர் https://www.adhi.edu.in/index.php  இணைப்பை பார்வையிடவும்.