Wednesday, 17 May 2017

விவி மினரலுக்கு எதிராக பிறப்பிக்கப் பட்ட உத்தரவு சட்ட விதிகளுக்கும் இயற்கை நியதிக்கும் முரணாக ஒரு தலைபட்சமாக பிறப்பிக்கப் பட்டது. இதோ ஆதாரம்

தாது மணல் இருப்புகளை ஆய்வு செய்ய  சென்னையில் இருந்து வந்த உயர் அதிகாரியை ரகசியமாக விவி நிறுவனத்திற்கு ஊடகங்களோடு கூட்டி வந்து அசிங்க படுத்த மாவட்டத்தில் உள்ள ஒரு உயர் அதிகாரி முயற்சி செய்தார். இது பற்றி தகவல் தெரிந்து தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று கூடி சென்னையில் இருந்து வந்த அதிகாரியிடம் மாவட்டத்தில் உள்ள அதிகாரி ஒரு தலை பட்சமாக செயல்படுவதையும், விவி மினரல் நிறுவனத்தின் கருத்தை கேட்காமலேயே வேண்டும் என்றே தவறான உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பதையும் நிறுவன மேலாளர்கள் தெரியப்படுத்தினார்கள்.

விவி-க்கு எதிராக எழுதுவதற்கு என்றே காசு வாங்கி உள்ள ஊடகங்கள் இதனை மறைத்தாலும் காசுக்கு விலை போகாத டெக்கான் கிரானிக்கல் பத்திரிக்கை இந்த செய்தியை வெளியிட்டது.

Link : http://www.deccanchronicle.com/nation/current-affairs/140517/workers-petition-court-commissioner-on-unfair-hearing.html#vuukle_div

டெக்கான் கிரானிக்கல் வெளியிட்ட செய்தி சரியானது தான் என்பதை அனைவரும் தெரிந்து கொள்வதற்காக ஏற்கனவே மாவட்ட ஆட்சி தலைவர் விவி-க்கு எதிரான சில நபர்களிடம் விவி-க்கு எதிராக உத்தரவு பிறப்பித்து தருகிறேன் என உறுதி மொழி கொடுத்துள்ளார் என பேசி வருவதை குறிப்பிட்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு தங்கள் தரப்பை கேட்க வேண்டும் என்றும் தாங்கள் என்றைய தினம் விளக்கம் சமர்பிக்க வேண்டும் என தெரிய படுத்துங்கள் என்று விவி மினரல் நிறுவனத்தின் சார்பில் 12.10.2016 அன்று பதிவு அஞ்சலில் எழுதிய கடிதத்தின் புகைப்பட நகல் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால் இயற்கை நியதிக்கு முரணாக எந்த விளக்கமும் கேட்காமல் எந்த விசாரணையும் நடத்தாமல் நிறுவனத்தின் நற்பெயரை கெடுத்து (Character-assassination) இழப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளோடு மட்டும் உத்தரவுகள் தயாரிக்கப் பட்டு கூட்டு சதியில் பங்கு உள்ள ஊடகங்களுக்கு மட்டும் முதலில் அனுப்பப் பட்டன. எங்கே இயற்கை நியதி??? இவ்வாறு உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் வலியுறுத்தி வரும் விதிமுறைகளை கடைபிடிக்காமல் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் இம்மாதிரி அதிகாரிகளால் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் எத்தனை பேருடைய வாழ்வாதாரத்தை உரிமையை, சுதந்திரத்தை பறித்து இருக்கும்? இதன் பின்னால் இருக்கும் மிகப் பெரிய சக்தி எது?




Workers petition court commissioner on unfair hearing

DECCAN CHRONICLE. | M ARULOLI

Blanket ban on beach mineral mining companies deprived them of their basic livelihood.
Workers of beach mineral companies expressed their grievances to the court commissioner Satyabrata Sahoo, who visited Valavallan factory on Saturday. (Photo: DC)



Tirunelveli: The court commissioner, Satyabrata Sahoo assured the workers of the beach mineral mining companies that he would not submit his report to the Madras high court without hearing their side.
Mr Sahoo, who has been appointed by the court to assess the stock of the beach mineral sand in the southern districts during his visit to one of the beach mineral factories at Vallanvilai in Radhapuram taluk was surrounded by around 500 labourers, who complained that the blanket ban imposed on beachmineral mining companies in the region deprived them of their basic livelihood.
The workers too complained that the district collector, M Karunakaran, who was present on the occasion, has been acting with personal motive in the issue.
Some of the higher officials of the beach mineral companies too added that the district collector deliberately refused to hear their side before taking action.
This, according to P S Kannan, manager of V V Minerals "may have hands of their global competitors from China" as V V Minerals, which stood first in the global garnet market an year ago has been pushed to the 18th place globally. Kannan also alleged that at the district level committee meeting, their company's complaint was not properly heard.
Receiving the four-page petition from the workers, the court commissioner, Mr. Satyabrata Sahoo promised the workers and officers of the beach mineral companies that he would not finalise any report without hearing the versions of both the companies and the workers.
The workers too have tactically warned of taking up series of demonstrations if their problems were not properly settled and the beach mineral companies reopened without redressing their issues.



1 comment:

  1. சட்டம், நீதி, இயற்கை நியதி அனைத்தையும் மீறி விசாரணை தேதி கூட தெரிவிக்காமல் பிறப்பிக்கப் பட்ட உத்தரவை ரத்து செய்ய பரிந்துரை செய்யாத ஆணையாளரும் அரசு செயலரும் கூட இதில் தவறு இழைத்தவர்களே!! அப்படியானால் எங்கே சட்டத்தின் ஆட்சி இருக்கிறது? நேர்மையானவர் என கூறிக் கொள்ளும் தலைமை செயலர் கிரிஜா வைத்தியனாதன் இதில் தலையிட்டு இவ்வாறு சட்ட விரோத உத்தரவு பிறப்பித்த மாவட்ட ஆட்சியர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இந்த உண்மையை பேசாமல் ஊடகங்கள் ஊமையாக இருப்பது அவர்களும் விலை போய் விட்டார்கள் என்பதை காட்டுகிறதா???

    உயர்நீதிமன்றம் இதை ரத்து செய்து நேர்மையாக விசாரணை நடத்த உத்தரவிட்டு தொழிலாளர் குடும்பங்களை காப்பதோடு சட்டவிரோதமாக உத்தரவு பிறப்பித்த அதிகாரியை கண்டிக்க வேண்டாமா??

    ReplyDelete