Wednesday, 18 April 2018

சிறப்பு பொருளாதார மண்டலங்கள்; ‘மேட்’ வரியை நீக்க கோரிக்கை

புதுடில்லி : ‘சிறப்பு பொரு­ளா­தார மண்­ட­லங்­களில் உள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு விதிக்­கப்­படும், ‘மேட்’ வரியை நீக்க வேண்­டும்’ என, பி.எச்.டி., வர்த்­தக கூட்­ட­மைப்பு, மத்­திய அர­சுக்கு கோரிக்கை விடுத்­து உள்­ளது.

இது குறித்து, கூட்­ட­மைப்­பின் தலை­வர், அனில் கெய்­தான் கூறி­ய­தா­வது: ஏற்­று­ம­தியை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக, சிறப்பு பொரு­ளா­தார மண்­ட­லங்­கள் அமைக்­கப்­பட்­டன. ஆனால், அந்த நோக்­கம் நிறை­வே­ற­வில்லை. சீனா, சிங்­கப்­பூர், சவுதி அரே­பியா போன்ற நாடு­களை போல, சிறப்பு பொரு­ளா­தார மண்­ட­லங்­க­ளின் ஏற்­று­ம­தியை மேம்­ப­டுத்த தவ­றி­விட்­டோம்.

இந்த மண்­ட­லங்­கள், கடந்த நிதி­யாண்­டில், 537 லட்­சம் கோடி ரூபாய் மதிப்­பிற்கு ஏற்­று­மதி செய்­துள்­ளன. எனி­னும், பல்­வேறு கட்­டுப்­பா­டு­கள், வளர்ச்­சிக்கு தடை­யாக உள்­ளன; அவற்றை நீக்க வேண்­டும். இந்த மண்­ட­லங்­க­ளுக்கு வரிச் சலு­கை­கள் அளிக்­கப்­ப­டு­கின்­றன. இருந்­த­போ­தி­லும், சுல­ப­மாக தொழில் செய்­வது இன்­னும் பிரச்­னை­யா­கவே உள்­ளது.

குறிப்­பாக, நிறு­வ­னங்­க­ளின் லாபத்­தில், 18.5 சத­வீ­தம் மேட் வரி­யு­டன், இதர வரி­கள் வசூ­லிக்­கப்­ப­டு­கின்­றன; அவற்றை நீக்க வேண்­டும். இதன் மூலம், இம்­மண்­ட­லங்­க­ளுக்கு, அதிக அள­வில் நிறு­வ­னங்­கள் வரும்; ஏற்­று­மதி அதி­க­ரிக்­கும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

Source : http://m.dinamalar.com/businessdetail.php?id=42200 

No comments:

Post a Comment