Friday, 17 November 2017

தாது மணல் தொழிலாளர்களின் பரிதாப நிலை


அந்நிய நாட்டு நிறுவனங்கள் இந்திய உற்பத்தியாளர்களின் போட்டியை சமாளிக்க இந்தியாவில் சில புல்லுறுவிகளை வைத்து அரசு அதிகாரிகளையும் ஊடகங்களையும் சரி கட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் தாதுமணல் நிறுவனங்களின் இயக்கத்தை நிறுத்தி வைத்தார்கள். இதனால் சுமார் 50000 தொழிலாளர்களுக்கு மேல் பாதிக்கப் பட்டார்கள். இது சம்பந்தமாக அரசை அணுகும் போது நிழல் அரசு நடத்தும் திவாகரன் கூட்டம் அவர்களது உறவினர்களை மாவட்ட ஆட்சியராகவும், புவியியல் சுரங்கத்துறை இயக்குனர்களாகவும் நியமித்து அரசு ஆற்று மணலை ஏற்று நடத்துவது போல் இதனையும் செய்தால் பெரும் பணம் பண்ணலாம் என்ற எண்ணத்தில் நீதிமன்றத்தில் உள்ள வழக்கிற்கும் இழுத்தடிப்பு செய்து காலதாமதபடுத்தி வந்தார்கள். இதற்கு காசுக்கு விலை போகும் சில ஊடகங்களும் உடந்தையாக இருந்தன. நீதிமன்றத்தின் கதவை வழி இல்லாமல் தட்டிய நிறுவனங்களுக்கு வருட கணக்கில் நீதி கிடைக்காமல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதிமன்றத்தில் விரைவில் வழக்கு முடிந்து விடும் என்ற நம்பிக்கையில் தொழிலாளர்களை வேலை இல்லாமலேயே முழு சம்பளம் கொடுத்து விவி மினரல் நிறுவனம் இது வரை பாதுகாத்து வந்தது. தற்போது எப்போது இந்த பிரச்சனைகள் முடியும் என தெரியாத நிலையில் பிரச்சனை முடிந்த உடன் வேலைக்கு வாருங்கள் என கூறினார்கள். சில பணியாளர்கள் எங்களுக்கு முழுவதும் செட்டில் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். அதற்கும் நிர்வாகம் ஒப்புக் கொண்டது. விண்ணப்பம் சமர்பிக்கும் நபர்களுக்கு முழுவதும் செட்டில் செய்யப்படும் என அறிவித்தது. 

தற்போது ஒரு தொழிற்சாலையில் உள்ள பணியாளர்கள் மட்டும் இது சம்பந்தமாக வீதிக்கு வந்துள்ளார்கள். முந்தைய மாவட்ட ஆட்சியர் செய்த தவறு தற்போதைய ஆட்சியரால் திருத்தப்படவில்லை. அரசும் இதில் தலையிட தயாராக இல்லை. ஒரு செயற்கையான நெருக்கடியை கொடுத்து பணம் பறிப்பதிலேயே அரசியல்வாதிகள் குறியாக உள்ளார்கள்.  தொழிலாளர்களின் பாதிப்பை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல அனுப்பப் பட்ட புகார் மனுக்கள் எந்த பலனையும் தராத நிலையில் அரசு தலைமை செயலர் திருமதி கிரிஜா வைத்தியனாதன் அவர்களை சந்திக்க நேரம் ஒதுக்கி தர தொழிலாளர்கள் சார்பில் மனு அனுப்பப் பட்டது. ஆனால் எந்த பதிலும் இல்லை. 

எனவே தொழிலாளர்கள் வீதிக்கு வரும் நிலை ஏற்பட்டது. தற்போது தொழிலாளர்கள் ஒரு தொழிற்சாலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு காரணம் தொழிற்சாலை நிர்வாகம் அல்ல. அவர்கள் தொழிற்சாலையை இயக்குவதற்கு தயார். ஆனால் மாவட்ட ஆட்சியரின் தவறான உத்தரவு தான் இந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட காரணம். எனவே தொழிலாளர்களுக்கு அரசு சம்பளம் வழங்க வேண்டும் அல்லது தொழிற்சாலையை திறக்க அனுமதிக்க வேண்டும்.







5 comments:

  1. ஆற்றுமணல் போல் இதிலும் அரசு கொள்ளை அடிக்கலாம் என நினைக்கலாம். இந்த கொள்ளை திட்டத்தோடு தொழிற்சாலையை நிறுத்தி வைத்த அரசியல்வாதிகளிடம் இருந்து மக்கள் என்ன பதிலை எதிர் பார்க்க முடியும்.

    ReplyDelete
  2. பணியை நிறுத்திய அரசு இவர்களுக்கு சம்பளம் வழங்க கடமை பட்டுள்ளது. ஒரு வருடம் சும்மா சம்பளம் கொடுத்த நிர்வாகத்தை பாராட்ட தான் செய்ய வேண்டும். உள்நோக்கத்தோடு உத்தரவு பிறப்பித்த அதிகாரிகளிடம் இருந்து பணத்தை பிடித்து சம்பளம் வினியோகிக்க வேண்டும்.

    ReplyDelete
  3. இவர்கள் அரசையும் ஆட்சியரையும் அல்லவா எதிர்த்து போராட வேண்டும். நாளையே தொழிற்சாலையை திறக்க தயாராக உள்ள நிலையில் தொழிற்சாலையை மூடிய கலெக்டரை எதிர்த்து போராடாமல் நிர்வாகத்திற்கு எதிராக போராடுவது எந்த வகையில் நியாயம். இது தான் பாவம் ஓரிடம் பழி ஓரிடம் என்பதோ!!!

    ReplyDelete
  4. David Thangadurai
    அரசு தலைமை செயலர் திருமதி கிரிஜா வைத்தியனாதன் தன் கடமையை செய்ய தவறிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். 50000 தொழிலாளர்கள் வீதிக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களை சந்தித்து பேசி அவர்களின்; பாதிப்பை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பிரச்சினையை விரைந்து முடிக்க வேண்டும்.தொழிலாளர்களுக்கு அரசு சம்பளம் வழங்க வேண்டும் அல்லது தொழிற்சாலையை திறக்க அனுமதிக்க வேண்டும்.

    ReplyDelete
  5. அந்நிய நாட்டு நிறுவனங்களிடம் கமிஷன் பெற்று கொண்டு செயல்படும் சில புல்லுறுவிகளின் சதியால் தனியார் தாதுமணல் நிறுவனங்கள் ழூடப்பட்டுள்ளது. தொழிலாளர் விரோத தமிழக அரசு ஆற்று மணல் போல் தாது மணலிலும் கொள்ளை அடிக்கலாம் என்று நினைக்கின்றதோ என்ற எண்ணம் எழுகிறது. தற்போது தொழிலாளர்கள் வீதிக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியரின் தவறான உத்தரவே அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம். ஆகவே ஒன்று அரசு அனைத்து தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் அல்லது தொழிற்சாலையை திறக்க அனுமதிக்க வேண்டும்.

    ReplyDelete