இந்தியாவில் தாது மணல் தொழில் சிறந்து விளங்குவதற்கு மத்திய அரசு துறைகள் அவ்வப்போது பல்வேறு செமினார்களை நடத்தி சர்வதேச தரத்தில் இந்திய உற்பத்தியாளர்களும் உற்பத்தி செய்ய பயிற்சி கொடுத்தார்கள். இந்தியாவில் தாது மணல் தொழில் 2002-க்கு பிறகு தான் வளர்ச்சி அடைய ஆரம்பித்தது. அதற்கு காரணம் 2002-ல் பெங்களுரில் வைத்து மினரல் பிராசசிங் டெக்னாலஜிக்கு ஒரு சர்வதேச கருத்தரங்கை மத்திய அரசு துறைகளான Indian
Institute of Science, Indian Bureau of Minesஆகியவை இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் Indian
Institute of Mining Engineers ஆகியவற்றோடு சேர்ந்து நடத்தின. அதில் இந்தியன் ரேர் எர்த் நிறுவனம் மட்டும் அல்ல, அமெரிக்காவில் லெக்சிங்டன் நகரத்தில் உள்ள University
of Kentucky போபாலில் உள்ள Regional
Research Laboratory ஆகியவை சேர்ந்து தாது மணல் சுற்றுச்சூழல் பாதிக்காமல் இலகுவாக பிரித்து எடுப்பதில் உள்ள தொழில் நுட்பங்களை விளக்கினார்கள். இது தான் இந்தியாவின் தாது மணல் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய காரணம். அதன் பிறகு கடந்த 15 வருடங்களாக இம்மாதிரி சர்வதேச கருத்தரங்குகள் நடத்தப்படவில்லை. அவை நடத்தப்பட வேண்டியது அவசியம்.
மத்திய அரசு சுற்றுச்சூழல் பாதிப்பு இன்றி தொழிலை வளர்க்க முயற்சி செய்கிறது. மாநில அரசு மாமூலுக்காக 50000 தொழிலாளர்கள் வயிற்றில் அடித்து தொழிலை நிறுத்தி வைத்துள்ளது. ஏன் இப்போதைய மத்திய அரசு இதில் தலையிடவில்லை.
ReplyDelete