Friday, 22 November 2019

Mining sector contribution to GDP slips from 3% to 2.2% in 5 years

Mining sector contribution to GDP slips from 3% to 2.2% in 5 years


The mining sector’s contribution to the country’s GDP has come down from 3 percent to 2.2 percent in the last five years, the CII said in a report

                

New Delhi: The contribution  of the mining sector to the country’s GDP has come down from 3 percent to 2.2 percent in the last five years, the Confederation of Indian Industry (CII) said in a report on Saturday. In 2017- 18, the value of domestic production of all major minerals (excluding coal, lignite and minor minerals) was Rs 58,638 crores, while the import value of vital minerals and metals, at Rs 4.34 trillion, almost seven times higher than domestic production, aggravated the current account deficit.

IIP of mining sector has slipped from 5.8% to 3.2%

Mining sector is one of the core sectors of the Indian economy and is a lifeline for many industries, which thrive on raw materials. The Index of Industrial Production (IIP) of the mining sector has slipped to 3.2 percent from 5.8 percent in May 2018.

The mining sector is encountering pressing issues such as depleted output, squeezed margins, high taxation, lack of green clearances, and poor investment in fresh exploration. The sector is also besieged with other issues such as delays in operationalising mines. It needs to widen the exploration basket through increased reconnaissance and prospecting operations and requires an infusion of funds to achieve this. Thriving competitiveness and growth in the Indian mining sector is an imperative for the survival and success of not only this industry but the economy as a whole.

Boosting India’s mining sector

Boosting India’s mining sector requires the government to boost exploration and address auction-related issues. A high powered inter-ministerial body must be created for addressing the initial teething problems of asset allottees on a single-window basis and seamless transition from Reconnaissance Permit/Prospecting Licences to Mining Leases, CII said.
The government should permit sale of license at any stage (likely to be at the RP/ PL to ML stage), introduce an escalating scale of dead rent to deter the ‘hoarding of mine-able land,’ identify ‘no-go areas’ and create exclusive mining zones with prior in-principle statutory clearances for auction, the report said.

Transparency and flexibility of choice

“Create and share the entire geological and mineral database (digital) of the country in the public domain. Encourage junior miners and explorers to invest in mineral blocks of their choice. Adopt a cluster approach for small deposits which, individually, may be unviable (i.e. grant a single lease for multiple such deposits),” CII said.

Immediate action on mining leases expiring in 2020

The report called for time-bound execution of exploration by December 2019 through accelerated utilisation of the NMET fund and completion of the auction process by March 2020. It also urged the Centre to consider the auction of larger mineral blocks for optimised mining. “Provide automatic environment clearance (EC) and forest clearance (FC), if all the parameters remain the same. Declare upfront the restrictions applicable on the areas under concession. Reduce duplication in stages between EC and FC. Enhance the effectiveness of PAMCAF,” the report said.

Ambiguity in regulations

“Constitute a high-level committee to effectively review and recommend substantial simplification of EC and FC processes by eliminating non-value adding stages, specifying the time limit for each stage and drastic simplification for diversion of open forests, preferably with provision for ‘deemed approval’ at the end of 180 days,” CII said.

Rationalisation of levies

The report asked the government to set benchmark mineral royalties/ cess across countries, reduce financial levies to bring them in line with international standards and provide incentives for processing by applying a lower rate or charging royalty on the cost of extraction before processing.
Source : https://psuwatch.com/mining-sector-contribution-to-gdp-slips-from-3-to-2-2-in-5-years/ 

Monday, 18 November 2019

Mining sector can create lakhs of jobs

According to Survey by Indian Government Unemployment in Village area increases 44%. Thus to create employment opportunity in Village as well as Rural, granting new mining leases are essential. This alone will generate employment , revenue to government, and feed raw material to lot of industries. This is the only way to generate revenue and restore the Industrial growth. Federation of Indian Mining Industry, Secretary General Press Release explain in detail.







Thursday, 14 November 2019

Objection to Kumudam Reporter News about VV Group and its owner





---------- Forwarded message ---------
From: VVM Employees Association <vvmemployees@gmail.com>
Date: Fri, Nov 15, 2019 at 11:26 AM
Subject: விவி குரூப் கம்பெனிகள் மற்றும் அதன் உரிமையாளர் மீது உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டது சம்பந்தமாக
To: Kumudam reporter <kumudamreporter@gmail.com>
Cc: Kumudam <kumudamweekly@gmail.com>, Kumudam reporter <kumudamer@gmail.com>, <annaduraikumudamreporter@gmail.com>


செய்தி ஆசிரியர், குமுதம் ரிப்போர்ட்டர் அவர்களுக்கு,

தாங்கள் குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழில் 15.11.2019 வி.வி குருப் கம்பெனிகளைப் பற்றியும் அதன் உரிமையாளர் வைகுண்டராஜன் அவர்களைப் பற்றியும் உண்மைக்கு புறமாக உள்நோக்கதுடன் வெளியிட்டுள்ளீர்கள். இந்த தகவல் ஒரு வேளை உங்களுக்கு தவறாக தரப்பட்டதோ அப்படி தரப்பட்டிருந்தால் தாங்கள் தயவு கூர்ந்து இந்த கடிதத்தைப் முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள். ஏற்கனவே வி. வி .குழுமத்தில் பணியாற்றும் நாங்கள் வேலையில்லாமல் பல தொழிலாளர்களையும், பணியாளர்களையும் வெளியேற்றும் கட்டாயத்திற்குள்ளாகியுள்ளோம். இந்நிலையில் தங்களுடைய கட்டுரை உண்மைக்கு புறமாக வெளியிட்டு உரிமையாளர்களுக்கும், பணியாளர்களுக்கும், மனசுமையை தந்துள்ளீர்கள். தாதுமணல் விவகாரங்கள் ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது அவ்வழக்கில் சாதக பாதகங்களை உயர்நீதிமன்றம் பரிசீலித்து நியாயமான தீர்ப்பு வழங்கும். அந்த வழக்கு முடிவதுக்கு முன்னால் எங்கள் குழுமத்தை ஏதோ கொள்ளையர்கள் போல சித்தரித்துள்ளீர்கள் இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். இந்த கட்டுரையில் தங்களுக்கு எவ்வளவு பெரிய தவறான தகவலை தந்துள்ளார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு;, இலுமனைட் என்ற தாதுபொருள் அணு ஆயுதங்கள் தயாரிப்புக்கு தேவைப்படும் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்துகிறார்கள் என்று தாங்கள் தெரிவித்துள்ளீர்கள. ஆனால் உண்மையிலேயே இந்த இலுமனைட் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கு எந்த விதத்திலும் மூலப்பொருளாகப் பயன்படுத்தவில்லை. உலகில் எந்த மூலையிலும் இலுமனைட் வைத்து அணு ஆயுதம் தயாரிக்கப்பட்டதாக எந்த தகவலும் இல்லை. இது முழுவதுமாக உள்நோக்கத்துடன் எங்கள் நிறுவனத்திற்கு எதிராக உண்மைக்கு புறம்பாக பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளீர்கள். இது போன்று தவறான தகவல்களை சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் மிரட்டி பணம் பறிக்கும் கூட்டத்திடம் இருந்து பெறப்பட்ட தவறான தகவல்களை தாங்களும் தங்கள் பத்திரிக்கைகளின் பரிசீலிப்பதை பார்த்தால் தாங்களும் இந்த சமூக ஆர்வலர்கள் கூட்டத்தில் பங்கு வகிப்பவர் போல் ஐயம் எழுந்துள்ளது. இவ்வாறு தொடர்ந்து உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டால் நாங்கள் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவிடம் எடுத்துச்சென்று முறையிட உள்ளோம்.


இந்த தாது மணல் கார்னெட், இலுமனைட் மற்றும் ஏழு வகை கனிமங்கள் உள்ளடக்கியது. 1999-முதல் இந்திய அனுசக்தி துறை இலுமனைட்; டயிலிங்ஸ் தாதுக்களை இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டாம் அது அவர்களுக்கு நடைமுறை சிக்கல்கள்  மற்றும் போக்குவரத்துச்செலவு அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதனால் டயிலிங்ஸை உபயோகப்படுத்த குத்தகைத்தாரர்களுக்கு தடை ஏதும் இல்லை என்றும் அதன்பிறகு லைசன்ஸ் அளித்து இலுமனைட்; பிரித்து ஏற்றுமதி செய்ய இந்திய அனுசக்தி துறை அனுமதி அளித்திருந்தது. இந்த உண்மையை உங்களுக்கு வேண்டுமென்றே மறைத்து “தனியார்களுக்குத் கிடைக்கும் இலுமனைட் தாதுக்களை, அரசுக்குச் சொந்தமான இந்தியன் ரேர் எர்;த் நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்பது முன்பு இருந்த நடைமுறை. ஆனால் அதை யாரும் கண்டுகொள்ளாமல், வகைதொகையில்லாமல் கொள்ளையடித்து வந்தனர். இந்த செய்தி வேண்டுமென்றே உண்மைக்கு புறம்பாக வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத்தான் மத்திய மோடி அரசு செக் வைத்தது. அதவாவது, தனியார் நிறுவனங்கள் தாதுக்களை எடுக்க கூடாது என்று சட்டம் போட்டது. அதனால், பல சிமெண்ட் நிறுவனங்களும், வி.வி. டைட்டானியம் நிறுவனமும் இறக்குமதி செய்து வந்தனர்”. இது முற்றிலும் உள்நோக்குத்துடன் எழுதியுள்ளீர்கள். 


தாது மணல் விவகாரங்களில், உள்ளுர் தொழில் போட்டியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் மிரட்டி பணம் பறிக்க வேண்டும் என்ற தனி நபர்கள், மற்றும் வெளிநாட்டு தொழில் போட்டியாளர்கள், இவர்கள் அனைவரும் கூட்டாக சேர்ந்து தாது மணல் தொழில் எதிராக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். உங்களுக்கு தகவல் அளிப்பவர்களும் இந்த கூட்டத்தை சேர்ந்தவர்கள்தான். நம் தமழ்நாட்டில் தான் தொழில்களை முடக்குவதற்கு போராட்டம், பொய் பிரச்சாரம், உண்மைக்கு புறம்பாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியிடுதல். உங்கள் கட்டுரையில் ஒரு இடத்தில் “கிட்டத்தட்ட இது ஆலைக்கு மூடு விழா  நடத்திய மாதிரிதான் என்கிறார்கள்”. இந்த வாக்கியத்தில் உங்களுக்கு தகவலை அல்லது செய்தி கொடுத்தவர்களுடைய உள்நோக்கு தெரிகிறது.  அதை சமயம், இந்த செய்தி தாங்கள் மற்றும் தங்கள் பத்திரிக்கையின் ஆசிரியர்கள் என்னமும் தொழில்களுக்கு மூடு விழா நடத்துவதை தான் எதிர்பார்க்கிறார்கள் என்பது போல் உள்ளது.


அடுத்ததாக வி.வி. டைட்டானியம் பிக்மெண்ட் இலுமினைட் இறக்குமதி பற்றி எழுதியுள்ளீர்கள் இதில் வி.வி. டைட்டானியம் நிறுவனம் முறையாக சுங்க வரி செலுத்தி இலுமினைட் இறக்குமதி செய்வதற்கு கட்டணம் கட்டி சுங்க இலாக்காவிடம் அனுமதி கோரியிருந்தது. 


இதனிடையே திடீரென்று சமூக ஆர்வலர் எனும் ஒரு நபர் அவர் மகன் மூலம் எங்கள் உரிமையாளரை அணுகி தனக்கு மாதத்திற்கு ஒரு பெரிய தொகை மாமூலாக தர வேண்டும் என்றும் அல்லது தொழில் செய்ய விட மாட்டேன் என்றும், எல்லா மாவட்ட ஆட்சியர்களும் தனக்கு வேண்டிய தங்க முனியசாமி என்னும் உதவி இயக்குனர் சொல்லை கேட்க வேண்டும் என அறிவுரை பெற்று கொடுத்திருப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு துறையால் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ள தங்க முனியசாமியை பெரும் தொகை செலவு செய்து தலைமை அலுவலகத்தில் பணி நியமித்து இருப்பதாகவும், அவர் மூலம் அவ்வப்போது திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களிடம் பேசி வருவதாகவும் மிரட்டி பணம் கேட்டார். எங்கள் நிறுவனம் சமூக ஆர்வலர் என்ற மிரட்டல் பேர்வழிக்கு பணம் கொடுக்க மறுத்தது. உடனே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி துறைமுக சபைக்கு தொலைபேசியில் தெரிவித்தது இல்மனைட் கப்பலை துறைமுகத்திற்கு உள்ளேயே அனுமதிக்காதீர்கள் என நடுக்கடலிலேயே நிற்க வைத்து விட்டார். எங்கள் கிளியரிங் ஏஜெண்ட் இது சம்பந்தமாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்றம் இறக்குமதிக்கு தமிழக விதிகளே பொருந்தாது எனும் போது இறக்குமதியை தடை செய்ய முடியாது என கூறி இடைக்கால உத்தரவை 24.10.2019 அன்று பிறப்பித்தது. அதன் அடிப்படையில் இல்மனைட் இறக்குமதி செய்யப்பட்டன. பிறகு துறைமுகத்தை விட்டு வெளியே கொண்டு செல்ல அனுமதிக்க கூடாது என மாவட்ட ஆட்சியர் கோருவதாக கூறி எங்கள் சரக்கை வெளியே கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. மீண்டும் கிளியரிங் ஏஜெண்ட் 31.10.2019 அன்று உயர்நீதிமன்றத்தை அணுகினார். உடனடியாக துறைமுக சபையில் இருந்து நாங்கள் சரக்கை தடுக்கவில்லை என கூறினார்கள். அதனை பதிவு செய்து நீதிமன்றம் அந்த மனுவை முடித்து வைத்தது. 

உயர்நீதிமன்றத்தில் துறைமுக சார்பில் கொடுக்கப்பட்ட கேட் பாசுடன்  இலுமனைட் வி.வி டைட்டானியத்தில் உள்ள கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது. இவை அனைத்தும் மாவட்ட நிர்வாகம் அறிந்த பிறகும் உதவி இயக்குனரும், வட்டாட்சியரும் வந்து மாவட்ட ஆட்சியர் இந்த சரக்கை  நீங்கள் உபயோகிக்க மாட்டோம் என வாக்குமூலம் பெற்று வர சொல்கிறார் என கூறினார்கள். இதனை உபயோகிக்கவில்லை என்றால் எங்கள் தொழிற்சாலையில் பணிபுரியும் 700 தொழிலாளர்களின் பணி பாதிப்பு அடையும். நாங்கள் சரக்கு கொடுக்க வேண்டிய நபர்கள் பாதிப்பு அடைவார்கள். சுமார் 15 கோடி ரூபாய் அளவிற்கு பணம் செலுத்தி கொள்முதல் செய்யப்பட்ட இல்மனைட்டிற்கு இறக்குமதி வரியாக மட்டும் 75 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளோம். மேலும் மாவட்ட ஆட்சியரின் இந்த வேண்டதகாத நடவடிக்கைகளால் கப்பல் கம்பெனி, லாரி போக்குவரத்து, ஏற்றி இறக்குதல், காலதாமதம் என சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் எங்கள் நிறுவனத்திற்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. எனவே அந்த இல்மனைட்டை நாங்கள் உபயோகிக்க கூடாது என்றால் நீங்களோ அல்லது மாவட்ட ஆட்சியரோ எங்களுக்கு எழுத்து மூலம் உத்தரவிடுங்கள் என கூறினோம். மாவட்ட ஆட்சியர் எழுத்து மூலம் எதுவும் கொடுக்காதீர்கள் என கூறியதாக கூறி திரும்ப சென்று விட்டார்கள்.


மேற்குரிய உயர்நீதிமன்ற உத்தரவுகள் 24.10.2019 மற்றும் 31.10.2019 உத்தரவுகளைப் பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ளாமல் தாங்கள் தங்கள் கட்டுரையில் “இல்மனைட் தாது கப்பலில் இருந்து இறக்கி வைக்கலாம் வெளியே கொண்டு செல்லக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.” இந்த பொய்யான தகவல் நீதிமன்றத்தைக் அவமதிக்கும் செயலாகும். மேலும் நீதிமன்ற உத்தரவைப் மீறும் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலும் உண்மைக்கு புறமாக பொய்யாக சித்தரிக்கப்பட்டது. புகார் அளித்த கிராம நிர்வாக அதிகாரி எந்த ஒரு இடத்திலும் நீதிமன்ற உத்தரவை மீறியதாக புகாரில் தெரிவிக்கவில்லை. ஆக இவை அனைத்தும் உங்களுக்கு திட்டமிட்டு தவறான தகவல் அளித்துள்ளார்கள்.

மேலும இந்திய தண்டனைச் சட்டம் 420 மற்றும் 379 மற்றும் தாதுபொருட்கள் சட்டம் 21(1) 21(4) 21(4யு) கீழ் வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது. தங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது சட்டம் 420 பற்றி நாங்கள் யாரையும் ஏமாற்றவோ, நேர்மையின்றியோ இந்த இல்மினைட் தாதுபொருட்கள் இறக்குமதி செய்யவில்லை. 

சட்டம் 379 திருட்டு குற்றம் இந்த பிரிவைப் பயன்படுத்தியுள்ளார்கள்.  முதலில் இது டைட்டானியம் சார்பி;ல் இறக்குமதி ஆவணங்களுடன் மற்றும் அதற்குரிய சுங்கவரி கட்டி இறக்குமதி செய்யப்பட்டது. இந்த இலுமனைட் எங்களுக்காகவே நார்வேயிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. சுங்கவரி செலுத்திய பின் அந்த இலுமனைட் வி.வி. டைட்டானியம் கம்பெனிக்கு சொந்தமானது. கனிம சட்டம் இந்த இறக்குமதி செய்யப்பட்ட தாதுபொருட்களை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது இதனை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ஆற்றுமணல் இறக்குமதி வழக்கில் உறுதி செய்துள்ளது. ஆக முழுக்க இந்த கட்டுரையை வேண்டுமென்றே சிலர் சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில், உள்நோக்கத்தோடு, உண்மைக்கு புறம்பாக அவதூறு பரப்புவதற்காகவும் வி.வி. குழுமத்தின் மீது அவதூறு பரப்புவதற்காக உண்மைக்கு புறம்பாக செய்திகள் தங்களுக்கு வழங்கியுள்ளார்கள். 
மேலும் தற்போது வி.வி. டைட்டானியம் தொடர்ந்துள்ள ரிட் மனு மற்றும் குற்ற வழக்கை ரத்த செய்ய உயர்நீதிமன்றம் வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே இது பற்றி உண்மையான விவரங்களை தெரிந்து கொள்ளாமல் தயவு கூர்ந்து எந்த கட்டுரையும் எழுத வேண்டாம். என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் தாங்கள் ஒரு சின்ன பெட்டியில் கட்டுரையின் இடையில் பெட்டி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளீர்கள். அதில் எங்களை எங்கள் நிறுவனத்தின் உரிமையாளரைப் மாவட்ட ஆட்சியருடன் மோதல் நடந்த போது அவருக்கு மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டதாக எழுதியுள்ளீர்கள். முதலில் மாவட்ட ஆட்சியருடன் மோதல் என்பது தவறான செய்தி மற்றும் உள்நோக்கத்துடன் எழுதியது.

எங்கள் நிறுவனம் உரிமையாளர் எந்த வழக்குகளையும் சட்டத்தின் அடிப்படையில் மேற்கொண்டு அணுகி அதன் மூலம் மட்டுமே தீர்வு கொண்டுள்ளார். மேலும் இந்த மூன்று மாவட்ட ஆட்சியரும் எந்த சட்டத்தையும் பின்பற்றி எந்த ஒரு நடவடிக்கையும் தாது மணல் விவகாரத்தில் எடுக்கவில்லை என்பது  தங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

எனவே, இனிமேலும் தங்கள் பத்திரிக்கையில் தவறான செய்திகளை மற்றும் உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட வேண்டாம். நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ள வழக்கு சம்மந்த இல்லாமல் பொய் தகவலை பத்திரிக்கையில் வெளியிட வேண்டாம் என்று கேட்டுகொள்கிறோம்.

தயவு செய்து எங்களது மறுப்பை தங்கள் இதழில் வெளியிட கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
சி.சக்தி கணபதி
தலைவர்

நகல் :

திரு.அண்ணாதுரை, குமுதம் ரிப்போர்ட்டர்.

Friday, 8 November 2019

இல்மனைட் இறக்குமதி சம்பந்தமாக பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்கு பற்றி விளக்கம்.

தமிழ்நாடு கனிம போக்குவரத்து விதிகளில் கனிமங்களை நிறுவன உபயோகத்திற்கு பயன்படுத்தும் உபயோகிப்பாளர்கள் உரிமம் பெற வேண்டியது இல்லை என்பது குறிப்பிட்டு விதி விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. (விவி டைட்டானியம் நிறுவனம் இல்மனைட்டை டைட்டானியம் உற்பத்தி செய்ய உபயோகிப்பதால் உபயோகிப்பாளர் என்ற இனத்தில் வரும். உரிமம் பெற வேண்டியது இல்லை)

ஏற்றுமதி இறக்குமதிக்கு கனிம சட்டமே பொருந்தாது என்பதை மத்திய அரசு சுரங்கத்துறை கடித எண் 16/01/2016-MVI நாள் 13.10.2016 படி தெரியப்படுத்தி உள்ளது. (இணைப்பு 1)

கனிம சட்டம் பிரிவு 4(1-A) படி கனிமங்கள் போக்குவரத்து செய்ய விதி இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்பதை தமிழ்நாடு அரசு கடித எண் -14353/எம்.எம்.டி.2/2017-1  நாள் 06.11.2017 படி தெரியப்படுத்தி உள்ளது. (இணைப்பு 2)

கனிம சட்ட விதிமீறல் இருந்தாலும் மாவட்ட ஆட்சி தலைவர் மட்டுமே நேரடியாக நீதிமன்றத்தில் குற்ற வழக்கு தாக்கல் செய்யலாம். கீழ்நிலை அலுவலர்கள் யாரும் அவ்வாறு செய்ய முடியாது என்பதை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே வழக்கு எண் Crl.O.P.(MD) No. 5415 of 2011 and M.P.(MD) Nos. 1, 2 & 3 of 2011 ehs; 16.06.2011  - ல் தெரியப்படுத்தி உள்ளது. (இணைப்பு 3). ஆனால் இந்த இனத்தில் மாவட்ட ஆட்சியர் தனி வழக்காக தாக்கல் செய்யாமல் வேண்டும் என்றே கிராம நிர்வாக அலுவலர் மூலம் குற்ற வழக்கு தாக்கல் செய்துள்ளார். இறக்குமதி செய்து அரசுக்கு ராயல்டி செலுத்தி கொண்டு வரும் இனத்தில் திருட்டு என்பதும், மோசடி என்பதும் எவ்வாறு வரும் என தெரியவில்லை.


இறக்குமதி செய்யப்படும் கனிமங்களுக்கு தமிழ்நாடு கனிம போக்குவரத்து விதிகள் பொருந்தாது என்பதை சென்னை உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் வழக்கு எண் W.A. (MD). No.1454 of 2017 and  CMP.(MD)Nos.11161, and 11496 of 2017  நாள் 19.01.2018 ல் தீர்ப்பளித்துள்ளது. (இணைப்பு 4)

மேற்கண்ட வழக்கில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவரும் மாநில அரசும் கூட எதிர் மனுதாரர்கள். எனவே இறக்குமதி செய்யப்படும் கனிமங்களுக்கு உரிமம் தேவையில்லை என்பது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கும் ஏற்கனவே தெரியும்.

ஏற்றுமதி இறக்குமதி அன்னிய வாணிப மேம்பாடு சட்டத்தின் (Foreign Trade Development Act) கீழ் மத்திய அரசு அதிகாரிகளாலேயே நிர்வகிக்கப்பட்டு வருகிறது. மாநில அரசுக்குகோ, மாவட்ட ஆட்சியருக்கோ அல்லது இதர மாநில அரசு அதிகாரிகளுக்கோ இதில் தலையிட எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை.

விவி டைட்டானியம் நிறுவனம் இல்மனைட்டை இறக்குமதி செய்து டைட்டானியம் உற்பத்தி செய்ய உபயோகப்படுத்துகிறது. எனவே தமிழக அரசின் 2011 விதியின் கீழ் உரிமம் பெற வேண்டிய தேவையில்லை. இவ்வாறு உரிமம் இன்றி தான் இதுவரை இந்த நிறுவனம் இறக்குமதி செய்து இல்மனைட்டை டைட்டானியமாக உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்தது. இறக்குமதி செய்யப்படும் கனிமங்களின் அளவு மற்றும் ஆவணங்கள் மாவட்ட ஆட்சியருக்கும் சார் ஆட்சியருக்கும் பதிவு அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். இந்த நடைமுறை தான் பல வருடங்களாக எல்லா இறக்குமதியாளர்களாலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

திடீரென்று சமூக ஆர்வலர் என்ற பெயரில் ஒரு நபர் அவர் மகன் மூலம் இன்னொரு மத்தியஸ்தர் வழியாக எங்கள் உரிமையாளரை அணுகி தனக்கு மாதத்திற்கு ஒரு பெரிய தொகை மாமூலாக தர வேண்டும் என்றும் அல்லது தொழில் செய்ய விட மாட்டேன் என்றும், மேலும் இறக்குமதி செய்யும் கனிமங்களுக்கும் தனக்கு டன்னுக்கு ஒரு பெரும் தொகை தர வேண்டும் என்றும் பேரம் பேசினார். அதற்கு எங்கள் நிர்வாகம் மறுத்து விட்டது. 

அந்த திடீர் சமூக ஆர்வலர் எல்லா மாவட்ட ஆட்சியர்களும் தனக்கு வேண்டிய தங்க முனியசாமி என்னும் உதவி இயக்குனர் சொல்லை கேட்க வேண்டும் என அறிவுரை பெற்று கொடுத்திருப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு துறையால் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ள தங்க முனியசாமியை பெரும் தொகை செலவு செய்து தலைமை அலுவலகத்தில் பணியில் நியமித்து இருப்பதாகவும், அவர் மூலம் அவ்வப்போது திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களிடம் பேசி வருவதாகவும் மிரட்டி பணம் கேட்டார். எங்கள் நிறுவனம் சமூக ஆர்வலர் என்ற மிரட்டல் பேர்வழிக்கு பணம் கொடுக்க மறுத்து விட்டது.

திரு.தங்கமுனியசாமி என்பவர் அந்த சமூக ஆர்வலரின் மனைவியின் தூரத்து உறவினர். எனவே அவர் சட்ட விரோதமாக மாமூல் பெறுவதற்கு நெல்லை மாவட்டத்தில் பணியாற்றும் போதே உதவி செய்து வந்தார். நெல்லை மாவட்டத்தில் அவர் அரசு அலுவலகத்தில் வேறு நபர்களை வைத்து அரசு அலுவலக பணியை செய்து வந்ததை லஞ்ச ஒழிப்புத்துறை கண்டு பிடித்து அவர் மீது துறை நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்தது. அரசும் அரசாணை எண் G.O. (2D) No. 30 Industries (E.1) Department  நாள் 28.12.2018 படி அவர் மீது துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. (இணைப்பு 5).

வழக்கமாக லஞ்ச ஒழிப்பு துறையால் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்ட நபர்கள் மாவட்ட பொறுப்பிலோ அல்லது தலைமை அலுவலகத்திலோ பணி நியமனம் செய்யப்படக் கூடாது என விதி உள்ளது. ஆனால் பல லட்சம் செலவு செய்து அந்த விதிகளுக்கு புறம்பாக தங்கமுனியசாமி இயக்குனர் அலுவலகத்திலேயே ஒரு துறைக்கு பொறுப்பாக நியமிக்கப் பட்டுள்ளார் என்று பலரும் கூறி வந்த நிலையில் அவரை வைத்து மாவட்ட ஆட்சி தலைவரிடம் பேசி எங்கள் இறக்குமதியை தடுத்து விடுவதாக சமூக ஆர்வலர் மீண்டும் மிரட்டினார். அதற்கும் எங்கள் நிறுவன நிர்வாகம் அடிபணிய மறுத்து நாங்கள் ஒன்றும் கள்ள சாராயம் காய்ச்சவில்லை, பல கோடி ரூபாய் முதலீடு செய்து அரசுக்கு பல லட்சங்கள் வரி செலுத்தி தொழில் செய்து வருகிறோம். எனவே உன்னை போன்ற சமூக ஆர்வலர் என்ற பெயரில் மிரட்டி பணம் பறிக்கும் சமூக விரோதிகளுக்கு மாமூல் கொடுக்க தயார் இல்லை என கூறி விட்டார்கள். 

இவ்வாறு மறுத்த சில தினங்களில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி துறைமுக சபைக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்து எங்கள் நிறுவனத்திற்கு இல்மனைட் கொண்டு வரும் கப்பலை துறைமுகத்திற்கு உள்ளேயே அனுமதிக்காதீர்கள் என கூறி நடுக்கடலிலேயே கப்பலை நிற்க வைத்து விட்டார். 

எங்கள் கிளியரிங் ஏஜெண்ட் இது சம்பந்தமாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்றம் "கனிமங்கள் இறக்குமதி செய்வதற்கு தமிழக அரசின் விதிகளே பொருந்தாது எனும் போது இறக்குமதியை தடை செய்ய முடியாது" என கூறி இடைக்கால உத்தரவு எண்  W.P.(MD) No. 22615 of 2019 and WMP (MD) No.  19371 of 2019 நாள் 24.10.2019  படி வழங்கியது. (இணைப்பு 6)

அதன் அடிப்படையில் இல்மனைட் இறக்குமதி செய்யப் பட்டது. பிறகு துறைமுகத்தை விட்டு வெளியே கொண்டு செல்ல அனுமதிக்க கூடாது என மாவட்ட ஆட்சியர் கோருவதாக கூறி எங்கள் சரக்கை வெளியே கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. மீண்டும் கிளியரிங் ஏஜெண்ட் உயர்நீதிமன்றத்தை அணுகினார். உடனடியாக துறைமுக சபையில் இருந்து நாங்கள் சரக்கை தடுக்கவில்லை கனிமங்களை கொண்டு செல்ல கேட்பாஸ் வழங்கி விட்டோம் என கூறினார்கள். அதனை பதிவு செய்து நீதிமன்றம் அந்த மனுவை WMP(MD) No.19738 of 2019 IN WP(MD) No.22615 of 2019  படி முடித்தது. (இணைப்பு 7). அந்த மனுவிலும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களும் பிரதிவாதிகள். அவ்வாறு உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்ட கனிமங்கள் தொழிற்சாலைக்கு கொண்டு வரப்பட்டன. 

பிறகு திடீரென்று உதவி இயக்குனரும், வட்டாட்சியரும் வந்து மாவட்ட ஆட்சியர் இந்த சரக்;கை நீங்கள் உபயோகிக்க மாட்டோம் என வாக்குமூலம் பெற்று வர சொல்கிறார் என கூறினார்கள். இதனை உபயோகிக்க வில்லை என்றால் எங்கள் தொழிற்சாலையில் பணிபுரியும் 700 தொழிலாளர்களின் பணி பாதிப்பு அடையும். நாங்கள் டைட்டானியம்  உற்பத்தி செய்து கொடுக்க வேண்டிய நபர்கள் பாதிப்பு அடைவார்கள். சுமார் 15 கோடி ரூபாய் அளவிற்கு பணம் செலுத்தி கொள்முதல் செய்யப் பட்ட இல்மனைட்டிற்கு இறக்குமதி வரியாக மட்டும் சுமார் 87 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளோம். மேலும் மாவட்ட ஆட்சியரின் இந்த வேண்டதகாத நடவடிக்கைகளால் கப்பல் கம்பெனி, லாரி போக்குவரத்து, ஏற்றி இறக்குதல், காலதாமதம் என சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் எங்கள் நிறுவனத்திற்கு இழப்பீடு மட்டும் ஏற்பட்டுள்ளது. 

எனவே அந்த இல்மனைட்டை நாங்கள் உபயோகிக்க கூடாது என்றால் நீங்களோ அல்லது மாவட்ட ஆட்சியரோ எங்களுக்கு எழுத்து மூலம் உத்தரவிடுங்கள் என கூறினோம். மாவட்ட ஆட்சியர் எழுத்து மூலம் எதுவும் கொடுக்காதீர்கள். அவ்வாறு கொடுத்தால் நீதிமன்ற அவமதிப்பு ஆகி விடும் என சொல்லி அனுப்பியதாக கூறி திரும்ப சென்று விட்டார்கள்.

தற்போது கிராம நிர்வாக அலுவலரை வைத்து இந்த புகாரை கொடுத்துள்ளார்கள். 

இந்தியாவில் தற்போது இரண்டே இரண்டு டைட்டானியம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தான் உள்ளன. ஒரு கேரளாவில் திருவாங்கூர் டைட்டானியம் மற்றொன்று தமிழ்நாட்டின் விவி டைட்டானியம் பிக்மெண்ட் நிறுவனம் ஆகும். உலக டைட்டானியம் மார்க்கெட்டில் ஏகபோக கோலோச்சுவதற்காக சில அன்னிய நிறுவனங்கள் இங்குள்ள சில சமூக விரோதிகளையும் சில அதிகாரிகளையும் உபயோகித்து இவ்வாறான தவறான உத்தரவுகளை பிறப்பிக்கின்றது. 

இது பற்றி நாங்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாடி எங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை வசூல் செய்ய உத்தரவிடுவதோடு இம்மாதிரி தவறு செய்யும் அலுவலர்கள் மீது மத்திய புலனாய்வு துறை மூலம் சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைக்க உள்ளோம்.

Anx -1

Anx -2
Anx -3 Anx -4 Anx -5 Anx -6 Anx -7