---------- Forwarded message ---------
From: VVM Employees Association <vvmemployees@gmail.com>
Date: Fri, Nov 15, 2019 at 11:26 AM
Subject: விவி குரூப் கம்பெனிகள் மற்றும் அதன் உரிமையாளர் மீது உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டது சம்பந்தமாக
To: Kumudam reporter <kumudamreporter@gmail.com>
Cc: Kumudam <kumudamweekly@gmail.com>, Kumudam reporter <kumudamer@gmail.com>, <annaduraikumudamreporter@gmail.com>
செய்தி ஆசிரியர், குமுதம் ரிப்போர்ட்டர் அவர்களுக்கு,
தாங்கள் குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழில் 15.11.2019 வி.வி குருப் கம்பெனிகளைப் பற்றியும் அதன் உரிமையாளர் வைகுண்டராஜன் அவர்களைப் பற்றியும் உண்மைக்கு புறமாக உள்நோக்கதுடன் வெளியிட்டுள்ளீர்கள். இந்த தகவல் ஒரு வேளை உங்களுக்கு தவறாக தரப்பட்டதோ அப்படி தரப்பட்டிருந்தால் தாங்கள் தயவு கூர்ந்து இந்த கடிதத்தைப் முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள். ஏற்கனவே வி.
வி .குழுமத்தில் பணியாற்றும் நாங்கள் வேலையில்லாமல் பல தொழிலாளர்களையும், பணியாளர்களையும் வெளியேற்றும் கட்டாயத்திற்குள்ளாகியுள்ளோம். இந்நிலையில் தங்களுடைய கட்டுரை உண்மைக்கு புறமாக வெளியிட்டு உரிமையாளர்களுக்கும், பணியாளர்களுக்கும், மனசுமையை தந்துள்ளீர்கள். தாதுமணல் விவகாரங்கள் ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது அவ்வழக்கில் சாதக பாதகங்களை உயர்நீதிமன்றம் பரிசீலித்து நியாயமான தீர்ப்பு வழங்கும். அந்த வழக்கு முடிவதுக்கு முன்னால் எங்கள் குழுமத்தை ஏதோ கொள்ளையர்கள் போல சித்தரித்துள்ளீர்கள் இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். இந்த கட்டுரையில் தங்களுக்கு எவ்வளவு பெரிய தவறான தகவலை தந்துள்ளார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு;, இலுமனைட் என்ற தாதுபொருள் அணு ஆயுதங்கள் தயாரிப்புக்கு தேவைப்படும் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்துகிறார்கள் என்று தாங்கள் தெரிவித்துள்ளீர்கள. ஆனால் உண்மையிலேயே இந்த இலுமனைட் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கு எந்த விதத்திலும் மூலப்பொருளாகப் பயன்படுத்தவில்லை. உலகில் எந்த மூலையிலும் இலுமனைட் வைத்து அணு ஆயுதம் தயாரிக்கப்பட்டதாக எந்த தகவலும் இல்லை. இது முழுவதுமாக உள்நோக்கத்துடன் எங்கள் நிறுவனத்திற்கு எதிராக உண்மைக்கு புறம்பாக பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளீர்கள். இது போன்று தவறான தகவல்களை சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் மிரட்டி பணம் பறிக்கும் கூட்டத்திடம் இருந்து பெறப்பட்ட தவறான தகவல்களை தாங்களும் தங்கள் பத்திரிக்கைகளின் பரிசீலிப்பதை பார்த்தால் தாங்களும் இந்த சமூக ஆர்வலர்கள் கூட்டத்தில் பங்கு வகிப்பவர் போல் ஐயம் எழுந்துள்ளது. இவ்வாறு தொடர்ந்து உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டால் நாங்கள் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவிடம் எடுத்துச்சென்று முறையிட உள்ளோம்.
இந்த தாது மணல் கார்னெட், இலுமனைட் மற்றும் ஏழு வகை கனிமங்கள் உள்ளடக்கியது. 1999-முதல் இந்திய அனுசக்தி துறை இலுமனைட்; டயிலிங்ஸ் தாதுக்களை இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டாம் அது அவர்களுக்கு நடைமுறை சிக்கல்கள் மற்றும் போக்குவரத்துச்செலவு அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதனால் டயிலிங்ஸை உபயோகப்படுத்த குத்தகைத்தாரர்களுக்கு தடை ஏதும் இல்லை என்றும் அதன்பிறகு லைசன்ஸ் அளித்து இலுமனைட்; பிரித்து ஏற்றுமதி செய்ய இந்திய அனுசக்தி துறை அனுமதி அளித்திருந்தது. இந்த உண்மையை உங்களுக்கு வேண்டுமென்றே மறைத்து “தனியார்களுக்குத் கிடைக்கும் இலுமனைட் தாதுக்களை, அரசுக்குச் சொந்தமான இந்தியன் ரேர் எர்;த் நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்பது முன்பு இருந்த நடைமுறை. ஆனால் அதை யாரும் கண்டுகொள்ளாமல், வகைதொகையில்லாமல் கொள்ளையடித்து வந்தனர். இந்த செய்தி வேண்டுமென்றே உண்மைக்கு புறம்பாக வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத்தான் மத்திய மோடி அரசு செக் வைத்தது. அதவாவது, தனியார் நிறுவனங்கள் தாதுக்களை எடுக்க கூடாது என்று சட்டம் போட்டது. அதனால், பல சிமெண்ட் நிறுவனங்களும், வி.வி. டைட்டானியம் நிறுவனமும் இறக்குமதி செய்து வந்தனர்”. இது முற்றிலும் உள்நோக்குத்துடன் எழுதியுள்ளீர்கள்.
தாது மணல் விவகாரங்களில், உள்ளுர் தொழில் போட்டியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் மிரட்டி பணம் பறிக்க வேண்டும் என்ற தனி நபர்கள், மற்றும் வெளிநாட்டு தொழில் போட்டியாளர்கள், இவர்கள் அனைவரும் கூட்டாக சேர்ந்து தாது மணல் தொழில் எதிராக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். உங்களுக்கு தகவல் அளிப்பவர்களும் இந்த கூட்டத்தை சேர்ந்தவர்கள்தான். நம் தமழ்நாட்டில் தான் தொழில்களை முடக்குவதற்கு போராட்டம், பொய் பிரச்சாரம், உண்மைக்கு புறம்பாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியிடுதல். உங்கள் கட்டுரையில் ஒரு இடத்தில் “கிட்டத்தட்ட இது ஆலைக்கு மூடு விழா நடத்திய மாதிரிதான் என்கிறார்கள்”. இந்த வாக்கியத்தில் உங்களுக்கு தகவலை அல்லது செய்தி கொடுத்தவர்களுடைய உள்நோக்கு தெரிகிறது. அதை சமயம், இந்த செய்தி தாங்கள் மற்றும் தங்கள் பத்திரிக்கையின் ஆசிரியர்கள் என்னமும் தொழில்களுக்கு மூடு விழா நடத்துவதை தான் எதிர்பார்க்கிறார்கள் என்பது போல் உள்ளது.
அடுத்ததாக வி.வி. டைட்டானியம் பிக்மெண்ட் இலுமினைட் இறக்குமதி பற்றி எழுதியுள்ளீர்கள் இதில் வி.வி. டைட்டானியம் நிறுவனம் முறையாக சுங்க வரி செலுத்தி இலுமினைட் இறக்குமதி செய்வதற்கு கட்டணம் கட்டி சுங்க இலாக்காவிடம் அனுமதி கோரியிருந்தது.
இதனிடையே திடீரென்று சமூக ஆர்வலர் எனும் ஒரு நபர் அவர் மகன் மூலம் எங்கள் உரிமையாளரை அணுகி தனக்கு மாதத்திற்கு ஒரு பெரிய தொகை மாமூலாக தர வேண்டும் என்றும் அல்லது தொழில் செய்ய விட மாட்டேன் என்றும், எல்லா மாவட்ட ஆட்சியர்களும் தனக்கு வேண்டிய தங்க முனியசாமி என்னும் உதவி இயக்குனர் சொல்லை கேட்க வேண்டும் என அறிவுரை பெற்று கொடுத்திருப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு துறையால் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ள தங்க முனியசாமியை பெரும் தொகை செலவு செய்து தலைமை அலுவலகத்தில் பணி நியமித்து இருப்பதாகவும், அவர் மூலம் அவ்வப்போது திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களிடம் பேசி வருவதாகவும் மிரட்டி பணம் கேட்டார். எங்கள் நிறுவனம் சமூக ஆர்வலர் என்ற மிரட்டல் பேர்வழிக்கு பணம் கொடுக்க மறுத்தது. உடனே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி துறைமுக சபைக்கு தொலைபேசியில் தெரிவித்தது இல்மனைட் கப்பலை துறைமுகத்திற்கு உள்ளேயே அனுமதிக்காதீர்கள் என நடுக்கடலிலேயே நிற்க வைத்து விட்டார். எங்கள் கிளியரிங் ஏஜெண்ட் இது சம்பந்தமாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்றம் இறக்குமதிக்கு தமிழக விதிகளே பொருந்தாது எனும் போது இறக்குமதியை தடை செய்ய முடியாது என கூறி இடைக்கால உத்தரவை 24.10.2019 அன்று பிறப்பித்தது. அதன் அடிப்படையில் இல்மனைட் இறக்குமதி செய்யப்பட்டன. பிறகு துறைமுகத்தை விட்டு வெளியே கொண்டு செல்ல அனுமதிக்க கூடாது என மாவட்ட ஆட்சியர் கோருவதாக கூறி எங்கள் சரக்கை வெளியே கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. மீண்டும் கிளியரிங் ஏஜெண்ட் 31.10.2019 அன்று உயர்நீதிமன்றத்தை அணுகினார். உடனடியாக துறைமுக சபையில் இருந்து நாங்கள் சரக்கை தடுக்கவில்லை என கூறினார்கள். அதனை பதிவு செய்து நீதிமன்றம் அந்த மனுவை முடித்து வைத்தது.
உயர்நீதிமன்றத்தில் துறைமுக சார்பில் கொடுக்கப்பட்ட கேட் பாசுடன் இலுமனைட் வி.வி டைட்டானியத்தில் உள்ள கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது. இவை அனைத்தும் மாவட்ட நிர்வாகம் அறிந்த பிறகும் உதவி இயக்குனரும், வட்டாட்சியரும் வந்து மாவட்ட ஆட்சியர் இந்த சரக்கை நீங்கள் உபயோகிக்க மாட்டோம் என வாக்குமூலம் பெற்று வர சொல்கிறார் என கூறினார்கள். இதனை உபயோகிக்கவில்லை என்றால் எங்கள் தொழிற்சாலையில் பணிபுரியும் 700 தொழிலாளர்களின் பணி பாதிப்பு அடையும். நாங்கள் சரக்கு கொடுக்க வேண்டிய நபர்கள் பாதிப்பு அடைவார்கள். சுமார் 15 கோடி ரூபாய் அளவிற்கு பணம் செலுத்தி கொள்முதல் செய்யப்பட்ட இல்மனைட்டிற்கு இறக்குமதி வரியாக மட்டும் 75 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளோம். மேலும் மாவட்ட ஆட்சியரின் இந்த வேண்டதகாத நடவடிக்கைகளால் கப்பல் கம்பெனி, லாரி போக்குவரத்து, ஏற்றி இறக்குதல், காலதாமதம் என சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் எங்கள் நிறுவனத்திற்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. எனவே அந்த இல்மனைட்டை நாங்கள் உபயோகிக்க கூடாது என்றால் நீங்களோ அல்லது மாவட்ட ஆட்சியரோ எங்களுக்கு எழுத்து மூலம் உத்தரவிடுங்கள் என கூறினோம். மாவட்ட ஆட்சியர் எழுத்து மூலம் எதுவும் கொடுக்காதீர்கள் என கூறியதாக கூறி திரும்ப சென்று விட்டார்கள்.
மேற்குரிய உயர்நீதிமன்ற உத்தரவுகள் 24.10.2019 மற்றும் 31.10.2019 உத்தரவுகளைப் பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ளாமல் தாங்கள் தங்கள் கட்டுரையில் “இல்மனைட் தாது கப்பலில் இருந்து இறக்கி வைக்கலாம் வெளியே கொண்டு செல்லக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.” இந்த பொய்யான தகவல் நீதிமன்றத்தைக் அவமதிக்கும் செயலாகும். மேலும் நீதிமன்ற உத்தரவைப் மீறும் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலும் உண்மைக்கு புறமாக பொய்யாக சித்தரிக்கப்பட்டது. புகார் அளித்த கிராம நிர்வாக அதிகாரி எந்த ஒரு இடத்திலும் நீதிமன்ற உத்தரவை மீறியதாக புகாரில் தெரிவிக்கவில்லை. ஆக இவை அனைத்தும் உங்களுக்கு திட்டமிட்டு தவறான தகவல் அளித்துள்ளார்கள்.
மேலும இந்திய தண்டனைச் சட்டம் 420 மற்றும் 379 மற்றும் தாதுபொருட்கள் சட்டம் 21(1) 21(4) 21(4யு) கீழ் வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது. தங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது சட்டம் 420 பற்றி நாங்கள் யாரையும் ஏமாற்றவோ, நேர்மையின்றியோ இந்த இல்மினைட் தாதுபொருட்கள் இறக்குமதி செய்யவில்லை.
சட்டம் 379 திருட்டு குற்றம் இந்த பிரிவைப் பயன்படுத்தியுள்ளார்கள். முதலில் இது டைட்டானியம் சார்பி;ல் இறக்குமதி ஆவணங்களுடன் மற்றும் அதற்குரிய சுங்கவரி கட்டி இறக்குமதி செய்யப்பட்டது. இந்த இலுமனைட் எங்களுக்காகவே நார்வேயிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. சுங்கவரி செலுத்திய பின் அந்த இலுமனைட் வி.வி. டைட்டானியம் கம்பெனிக்கு சொந்தமானது. கனிம சட்டம் இந்த இறக்குமதி செய்யப்பட்ட தாதுபொருட்களை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது இதனை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ஆற்றுமணல் இறக்குமதி வழக்கில் உறுதி செய்துள்ளது. ஆக முழுக்க இந்த கட்டுரையை வேண்டுமென்றே சிலர் சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில், உள்நோக்கத்தோடு, உண்மைக்கு புறம்பாக அவதூறு பரப்புவதற்காகவும் வி.வி. குழுமத்தின் மீது அவதூறு பரப்புவதற்காக உண்மைக்கு புறம்பாக செய்திகள் தங்களுக்கு வழங்கியுள்ளார்கள்.
மேலும் தற்போது வி.வி. டைட்டானியம் தொடர்ந்துள்ள ரிட் மனு மற்றும் குற்ற வழக்கை ரத்த செய்ய உயர்நீதிமன்றம் வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே இது பற்றி உண்மையான விவரங்களை தெரிந்து கொள்ளாமல் தயவு கூர்ந்து எந்த கட்டுரையும் எழுத வேண்டாம். என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் தாங்கள் ஒரு சின்ன பெட்டியில் கட்டுரையின் இடையில் பெட்டி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளீர்கள். அதில் எங்களை எங்கள் நிறுவனத்தின் உரிமையாளரைப் மாவட்ட ஆட்சியருடன் மோதல் நடந்த போது அவருக்கு மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டதாக எழுதியுள்ளீர்கள். முதலில் மாவட்ட ஆட்சியருடன் மோதல் என்பது தவறான செய்தி மற்றும் உள்நோக்கத்துடன் எழுதியது.
எங்கள் நிறுவனம் உரிமையாளர் எந்த வழக்குகளையும் சட்டத்தின் அடிப்படையில் மேற்கொண்டு அணுகி அதன் மூலம் மட்டுமே தீர்வு கொண்டுள்ளார். மேலும் இந்த மூன்று மாவட்ட ஆட்சியரும் எந்த சட்டத்தையும் பின்பற்றி எந்த ஒரு நடவடிக்கையும் தாது மணல் விவகாரத்தில் எடுக்கவில்லை என்பது தங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
எனவே, இனிமேலும் தங்கள் பத்திரிக்கையில் தவறான செய்திகளை மற்றும் உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட வேண்டாம். நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ள வழக்கு சம்மந்த இல்லாமல் பொய் தகவலை பத்திரிக்கையில் வெளியிட வேண்டாம் என்று கேட்டுகொள்கிறோம்.
தயவு செய்து எங்களது மறுப்பை தங்கள் இதழில் வெளியிட கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
சி.சக்தி கணபதி
தலைவர்
நகல் :
திரு.அண்ணாதுரை, குமுதம் ரிப்போர்ட்டர்.
No comments:
Post a Comment