Friday, 8 November 2019

இல்மனைட் இறக்குமதி சம்பந்தமாக பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்கு பற்றி விளக்கம்.

தமிழ்நாடு கனிம போக்குவரத்து விதிகளில் கனிமங்களை நிறுவன உபயோகத்திற்கு பயன்படுத்தும் உபயோகிப்பாளர்கள் உரிமம் பெற வேண்டியது இல்லை என்பது குறிப்பிட்டு விதி விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. (விவி டைட்டானியம் நிறுவனம் இல்மனைட்டை டைட்டானியம் உற்பத்தி செய்ய உபயோகிப்பதால் உபயோகிப்பாளர் என்ற இனத்தில் வரும். உரிமம் பெற வேண்டியது இல்லை)

ஏற்றுமதி இறக்குமதிக்கு கனிம சட்டமே பொருந்தாது என்பதை மத்திய அரசு சுரங்கத்துறை கடித எண் 16/01/2016-MVI நாள் 13.10.2016 படி தெரியப்படுத்தி உள்ளது. (இணைப்பு 1)

கனிம சட்டம் பிரிவு 4(1-A) படி கனிமங்கள் போக்குவரத்து செய்ய விதி இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்பதை தமிழ்நாடு அரசு கடித எண் -14353/எம்.எம்.டி.2/2017-1  நாள் 06.11.2017 படி தெரியப்படுத்தி உள்ளது. (இணைப்பு 2)

கனிம சட்ட விதிமீறல் இருந்தாலும் மாவட்ட ஆட்சி தலைவர் மட்டுமே நேரடியாக நீதிமன்றத்தில் குற்ற வழக்கு தாக்கல் செய்யலாம். கீழ்நிலை அலுவலர்கள் யாரும் அவ்வாறு செய்ய முடியாது என்பதை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே வழக்கு எண் Crl.O.P.(MD) No. 5415 of 2011 and M.P.(MD) Nos. 1, 2 & 3 of 2011 ehs; 16.06.2011  - ல் தெரியப்படுத்தி உள்ளது. (இணைப்பு 3). ஆனால் இந்த இனத்தில் மாவட்ட ஆட்சியர் தனி வழக்காக தாக்கல் செய்யாமல் வேண்டும் என்றே கிராம நிர்வாக அலுவலர் மூலம் குற்ற வழக்கு தாக்கல் செய்துள்ளார். இறக்குமதி செய்து அரசுக்கு ராயல்டி செலுத்தி கொண்டு வரும் இனத்தில் திருட்டு என்பதும், மோசடி என்பதும் எவ்வாறு வரும் என தெரியவில்லை.


இறக்குமதி செய்யப்படும் கனிமங்களுக்கு தமிழ்நாடு கனிம போக்குவரத்து விதிகள் பொருந்தாது என்பதை சென்னை உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் வழக்கு எண் W.A. (MD). No.1454 of 2017 and  CMP.(MD)Nos.11161, and 11496 of 2017  நாள் 19.01.2018 ல் தீர்ப்பளித்துள்ளது. (இணைப்பு 4)

மேற்கண்ட வழக்கில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவரும் மாநில அரசும் கூட எதிர் மனுதாரர்கள். எனவே இறக்குமதி செய்யப்படும் கனிமங்களுக்கு உரிமம் தேவையில்லை என்பது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கும் ஏற்கனவே தெரியும்.

ஏற்றுமதி இறக்குமதி அன்னிய வாணிப மேம்பாடு சட்டத்தின் (Foreign Trade Development Act) கீழ் மத்திய அரசு அதிகாரிகளாலேயே நிர்வகிக்கப்பட்டு வருகிறது. மாநில அரசுக்குகோ, மாவட்ட ஆட்சியருக்கோ அல்லது இதர மாநில அரசு அதிகாரிகளுக்கோ இதில் தலையிட எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை.

விவி டைட்டானியம் நிறுவனம் இல்மனைட்டை இறக்குமதி செய்து டைட்டானியம் உற்பத்தி செய்ய உபயோகப்படுத்துகிறது. எனவே தமிழக அரசின் 2011 விதியின் கீழ் உரிமம் பெற வேண்டிய தேவையில்லை. இவ்வாறு உரிமம் இன்றி தான் இதுவரை இந்த நிறுவனம் இறக்குமதி செய்து இல்மனைட்டை டைட்டானியமாக உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்தது. இறக்குமதி செய்யப்படும் கனிமங்களின் அளவு மற்றும் ஆவணங்கள் மாவட்ட ஆட்சியருக்கும் சார் ஆட்சியருக்கும் பதிவு அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். இந்த நடைமுறை தான் பல வருடங்களாக எல்லா இறக்குமதியாளர்களாலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

திடீரென்று சமூக ஆர்வலர் என்ற பெயரில் ஒரு நபர் அவர் மகன் மூலம் இன்னொரு மத்தியஸ்தர் வழியாக எங்கள் உரிமையாளரை அணுகி தனக்கு மாதத்திற்கு ஒரு பெரிய தொகை மாமூலாக தர வேண்டும் என்றும் அல்லது தொழில் செய்ய விட மாட்டேன் என்றும், மேலும் இறக்குமதி செய்யும் கனிமங்களுக்கும் தனக்கு டன்னுக்கு ஒரு பெரும் தொகை தர வேண்டும் என்றும் பேரம் பேசினார். அதற்கு எங்கள் நிர்வாகம் மறுத்து விட்டது. 

அந்த திடீர் சமூக ஆர்வலர் எல்லா மாவட்ட ஆட்சியர்களும் தனக்கு வேண்டிய தங்க முனியசாமி என்னும் உதவி இயக்குனர் சொல்லை கேட்க வேண்டும் என அறிவுரை பெற்று கொடுத்திருப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு துறையால் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ள தங்க முனியசாமியை பெரும் தொகை செலவு செய்து தலைமை அலுவலகத்தில் பணியில் நியமித்து இருப்பதாகவும், அவர் மூலம் அவ்வப்போது திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களிடம் பேசி வருவதாகவும் மிரட்டி பணம் கேட்டார். எங்கள் நிறுவனம் சமூக ஆர்வலர் என்ற மிரட்டல் பேர்வழிக்கு பணம் கொடுக்க மறுத்து விட்டது.

திரு.தங்கமுனியசாமி என்பவர் அந்த சமூக ஆர்வலரின் மனைவியின் தூரத்து உறவினர். எனவே அவர் சட்ட விரோதமாக மாமூல் பெறுவதற்கு நெல்லை மாவட்டத்தில் பணியாற்றும் போதே உதவி செய்து வந்தார். நெல்லை மாவட்டத்தில் அவர் அரசு அலுவலகத்தில் வேறு நபர்களை வைத்து அரசு அலுவலக பணியை செய்து வந்ததை லஞ்ச ஒழிப்புத்துறை கண்டு பிடித்து அவர் மீது துறை நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்தது. அரசும் அரசாணை எண் G.O. (2D) No. 30 Industries (E.1) Department  நாள் 28.12.2018 படி அவர் மீது துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. (இணைப்பு 5).

வழக்கமாக லஞ்ச ஒழிப்பு துறையால் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்ட நபர்கள் மாவட்ட பொறுப்பிலோ அல்லது தலைமை அலுவலகத்திலோ பணி நியமனம் செய்யப்படக் கூடாது என விதி உள்ளது. ஆனால் பல லட்சம் செலவு செய்து அந்த விதிகளுக்கு புறம்பாக தங்கமுனியசாமி இயக்குனர் அலுவலகத்திலேயே ஒரு துறைக்கு பொறுப்பாக நியமிக்கப் பட்டுள்ளார் என்று பலரும் கூறி வந்த நிலையில் அவரை வைத்து மாவட்ட ஆட்சி தலைவரிடம் பேசி எங்கள் இறக்குமதியை தடுத்து விடுவதாக சமூக ஆர்வலர் மீண்டும் மிரட்டினார். அதற்கும் எங்கள் நிறுவன நிர்வாகம் அடிபணிய மறுத்து நாங்கள் ஒன்றும் கள்ள சாராயம் காய்ச்சவில்லை, பல கோடி ரூபாய் முதலீடு செய்து அரசுக்கு பல லட்சங்கள் வரி செலுத்தி தொழில் செய்து வருகிறோம். எனவே உன்னை போன்ற சமூக ஆர்வலர் என்ற பெயரில் மிரட்டி பணம் பறிக்கும் சமூக விரோதிகளுக்கு மாமூல் கொடுக்க தயார் இல்லை என கூறி விட்டார்கள். 

இவ்வாறு மறுத்த சில தினங்களில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி துறைமுக சபைக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்து எங்கள் நிறுவனத்திற்கு இல்மனைட் கொண்டு வரும் கப்பலை துறைமுகத்திற்கு உள்ளேயே அனுமதிக்காதீர்கள் என கூறி நடுக்கடலிலேயே கப்பலை நிற்க வைத்து விட்டார். 

எங்கள் கிளியரிங் ஏஜெண்ட் இது சம்பந்தமாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்றம் "கனிமங்கள் இறக்குமதி செய்வதற்கு தமிழக அரசின் விதிகளே பொருந்தாது எனும் போது இறக்குமதியை தடை செய்ய முடியாது" என கூறி இடைக்கால உத்தரவு எண்  W.P.(MD) No. 22615 of 2019 and WMP (MD) No.  19371 of 2019 நாள் 24.10.2019  படி வழங்கியது. (இணைப்பு 6)

அதன் அடிப்படையில் இல்மனைட் இறக்குமதி செய்யப் பட்டது. பிறகு துறைமுகத்தை விட்டு வெளியே கொண்டு செல்ல அனுமதிக்க கூடாது என மாவட்ட ஆட்சியர் கோருவதாக கூறி எங்கள் சரக்கை வெளியே கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. மீண்டும் கிளியரிங் ஏஜெண்ட் உயர்நீதிமன்றத்தை அணுகினார். உடனடியாக துறைமுக சபையில் இருந்து நாங்கள் சரக்கை தடுக்கவில்லை கனிமங்களை கொண்டு செல்ல கேட்பாஸ் வழங்கி விட்டோம் என கூறினார்கள். அதனை பதிவு செய்து நீதிமன்றம் அந்த மனுவை WMP(MD) No.19738 of 2019 IN WP(MD) No.22615 of 2019  படி முடித்தது. (இணைப்பு 7). அந்த மனுவிலும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களும் பிரதிவாதிகள். அவ்வாறு உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்ட கனிமங்கள் தொழிற்சாலைக்கு கொண்டு வரப்பட்டன. 

பிறகு திடீரென்று உதவி இயக்குனரும், வட்டாட்சியரும் வந்து மாவட்ட ஆட்சியர் இந்த சரக்;கை நீங்கள் உபயோகிக்க மாட்டோம் என வாக்குமூலம் பெற்று வர சொல்கிறார் என கூறினார்கள். இதனை உபயோகிக்க வில்லை என்றால் எங்கள் தொழிற்சாலையில் பணிபுரியும் 700 தொழிலாளர்களின் பணி பாதிப்பு அடையும். நாங்கள் டைட்டானியம்  உற்பத்தி செய்து கொடுக்க வேண்டிய நபர்கள் பாதிப்பு அடைவார்கள். சுமார் 15 கோடி ரூபாய் அளவிற்கு பணம் செலுத்தி கொள்முதல் செய்யப் பட்ட இல்மனைட்டிற்கு இறக்குமதி வரியாக மட்டும் சுமார் 87 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளோம். மேலும் மாவட்ட ஆட்சியரின் இந்த வேண்டதகாத நடவடிக்கைகளால் கப்பல் கம்பெனி, லாரி போக்குவரத்து, ஏற்றி இறக்குதல், காலதாமதம் என சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் எங்கள் நிறுவனத்திற்கு இழப்பீடு மட்டும் ஏற்பட்டுள்ளது. 

எனவே அந்த இல்மனைட்டை நாங்கள் உபயோகிக்க கூடாது என்றால் நீங்களோ அல்லது மாவட்ட ஆட்சியரோ எங்களுக்கு எழுத்து மூலம் உத்தரவிடுங்கள் என கூறினோம். மாவட்ட ஆட்சியர் எழுத்து மூலம் எதுவும் கொடுக்காதீர்கள். அவ்வாறு கொடுத்தால் நீதிமன்ற அவமதிப்பு ஆகி விடும் என சொல்லி அனுப்பியதாக கூறி திரும்ப சென்று விட்டார்கள்.

தற்போது கிராம நிர்வாக அலுவலரை வைத்து இந்த புகாரை கொடுத்துள்ளார்கள். 

இந்தியாவில் தற்போது இரண்டே இரண்டு டைட்டானியம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தான் உள்ளன. ஒரு கேரளாவில் திருவாங்கூர் டைட்டானியம் மற்றொன்று தமிழ்நாட்டின் விவி டைட்டானியம் பிக்மெண்ட் நிறுவனம் ஆகும். உலக டைட்டானியம் மார்க்கெட்டில் ஏகபோக கோலோச்சுவதற்காக சில அன்னிய நிறுவனங்கள் இங்குள்ள சில சமூக விரோதிகளையும் சில அதிகாரிகளையும் உபயோகித்து இவ்வாறான தவறான உத்தரவுகளை பிறப்பிக்கின்றது. 

இது பற்றி நாங்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாடி எங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை வசூல் செய்ய உத்தரவிடுவதோடு இம்மாதிரி தவறு செய்யும் அலுவலர்கள் மீது மத்திய புலனாய்வு துறை மூலம் சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைக்க உள்ளோம்.

Anx -1

Anx -2
Anx -3 Anx -4 Anx -5 Anx -6 Anx -7

No comments:

Post a Comment