ஒவ்வொரு மாநிலமும் மற்றும் தேசமும் தொழில் வளர்ச்சியை பெருக்குவதற்காக முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு காரணம் தொழில் வளர்ச்சி பெருகினால் மட்டுமே வேலை வாய்ப்பு பெருகும். அரசின் வருவாய் உயரும். மக்களின் வாழ்க்கை தரம் உயரும். ஆனால் துரதிஷ்டவசமாக தமிழ்நாட்டில் இதற்கு நேர் எதிர் மாறான நிலையே உள்ளது. அரசும் எந்த புதிய தொழில்களையும் கடந்த 10 வருடத்தில் தமிழகத்தில் துவக்கவில்லை. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 50000 தொழில்கள் மூடப்பட்டுள்ளன. 5 லட்சம் நபர்கள் வேலை இழந்துள்ளார்கள் என்று அமைச்சரே சட்டமன்றத்தில் கூறும் நிலை உள்ளது. தொழில் அதிபர்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய அரசு அதிகாரிகளை அல்லது தலைமை செயலரை சந்திக்க அனுமதி கேட்டால் எந்த பதிலும் கொடுக்கப்படுவதில்லை. எனவே தொழில் அதிபர்களின் குறைகள் நிவர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளது.
மேலும் மாமூல் கொடுக்காத தொழில் அதிபர்களை அரசே திருட்டு பட்டம் சுமத்தி முழு தொழிலையுமே இடையூறு செய்து பல ஆயிரம் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை கெடுக்கிறது. அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை கவனத்தில் கொள்ளாமல் தங்களுக்கு மாமூல் தர மறுத்ததால் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அரசின் கண்களுக்கு தெரிகிறது. அந்த காலத்திலேயே கணக்கனை பகைத்தவன் காணி இழந்தான் என்ற ஒரு பழமொழி உண்டு. அப்படியானால் அரசின் கோபத்தை பெற்றால் என்னவெல்லாம் இழக்க வேண்டும். இதற்கு பொருத்தமான உதாரணம் தாது மணல் தொழில். தாது மணல் தொழில் நிறுத்தத்தால் மட்டும் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 750 கோடி ரூபாய் இழப்பீடு மற்றும் 50000 தொழிலாளர்களின் வேலை இழப்பு மற்றும் இந்திய அரசுக்கு சுமார் 2000 கோடி ரூபாய் அந்நிய செலவாணி இழப்பு. இவை எதை பற்றியும் கவலை படாமல் மக்களின் கவனத்தை ஆற்று மணல் கொள்ளை விசயத்தில் இருந்து திசை திருப்ப தாது மணலில் தவறு நடந்திருப்பது போல் நிழல் உலக அரசே சித்தரித்து பிரச்சாரம் செய்வது தான் கொடுமையிலும் கொடுமை.
இவ்வாறு ஒவ்வொரு தொழிலாக தவறான காரணங்களுக்காக பொய்யான குற்றச்சாட்டுகளுடன் நிறுத்தப்படுவதால் தான் அமைதியாக தொழில் செய்ய வேண்டும் என நினைக்கும் தொழில் அதிபர்கள் தமிழகத்தை விரும்புவதில்லை என்ற நிலை ஏற்படுகிறது. முதன் முதலில் இதனை தைரியமாக ஒரு டிஜிட்டல் மீடியா செய்தியாக வெளியிட்டுள்ளது.
Source : http://www.rediff.com/business/report/why-investors-in-tamil-nadu-are-in-a-spot/20180628.htm