Friday, 8 June 2018

கனிம வளம் - சட்டமன்றத்தில் உண்மையை கூறிய அமைச்சர்

கனிம வள குத்தகைகள் மூலம் அரசுக்கு வருவாயும் ஏராளமான வேலை வாய்ப்பும் கிடைக்கின்றது. முன்பு இதற்கான அனுமதியை மத்திய அரசிடம் பெற வேண்டும். தற்போது மாநில அரசே அந்த அனுமதியை கொடுக்க வழிவகை உள்ளது. எனவே குத்தகைகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும், கடந்த ஆண்டு இல்லீகல் மைனிங்கிற்கு விதிக்கப் பட்ட அபராதம் ரூபாய் 20 கோடி. இந்த ஆண்டு அது 49 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என சட்டமன்றத்தில் அமைச்சர் குறிப்பிட்ட கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப் பட்டது செய்தியாக வந்துள்ளது.

இதையே தான் நாங்கள் சொல்கிறோம். அரசுக்கு வருவாயும் ஏராளமான வேலை வாய்ப்பும் கிடைக்கும். தாது மணல் தொழிலை நிறுத்தி வைப்பதை விடுத்து அதனை இயக்க அனுமதித்தால் அரசின் வருவாயும் இரட்டிப்பாகும். வேலை பாதிக்கப்பட்ட 50000 தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலையும் கிடைக்கும்.

*******

கிரானைட் குவாரிகள்
மீண்டும் திறக்க முடிவு
சென்னை : ''மீண்டும், கிரானைட் குவாரிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை, அரசு எடுத்து வருகிறது,'' என, சட்டம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர், சி.வி.சண்முகம் கூறினார்.
கிரானைட்,குவாரிகள்,மீண்டும் திறக்க,முடிவு

வேலை வாய்ப்பு :

சட்டசபையில், நேற்று கனிம வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு, அமைச்சர் சண்முகம் அளித்த பதிலுரை: கனிம வளங்கள் வாயிலாக, இந்தாண்டு அரசுக்கு, 1,106 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. கனிம வள தொழிலில், பலருக்கு வேலை வாய்ப்புகளும் கிடைக்கின்றன. கனிம வளத்துறையில், 2,048 குத்தகைதாரர்கள் உள்ளனர்.
கனிம வளங்களை வெட்டி எடுப்பதற்கு முன், டில்லி சென்று, மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டிய நிலை இருந்தது. தற்போது, அந்நிலை மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள, மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழுவிடம் விண்ணப்பித்து, அனுமதி பெறலாம். அதன்படி, கனிம வளத்துறை குத்தகைதாரர்களில், 599 பேர், தங்கள் குத்தகையை புதுப்பிக்க, மனு அளித்து உள்ளனர்.

மீதமுள்ளவர்கள், பல்வேறு காரணங்களால், குத்தகையை புதுப்பிக்க முன்வரவில்லை. கனிம வள முறைகேட்டை தடுக்க, இந்த அரசு, துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. கனிம வள முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் கண்டறியப்பட்டு, இந்தாண்டு, 49 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. கடந்தாண்டு, 28 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப் பட்டது.

கிரானைட் மூலமாக, அரசுக்கு அதிகளவில் வருவாய் கிடைத்து வந்தது. ஏராளமான வேலை வாய்ப்புகள் கிடைத்தன.
Source : http://www.dinamalar.com/news_detail.asp?id=2036472

No comments:

Post a Comment