Tuesday 11 August 2020

புதைந்து கிடக்கும் கனிம வளத்தை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த அரசு முயற்சிக்குமா?

இந்திய சுரங்க அமைச்சர் தலைமையில் நடந்த இருவேறு வீடியோ கான்பரன்ஸ்சில் காண்பிக்கப் பட்ட இரண்டு ஸ்லைடுகள் தான் கீழே உள்ளது. இதனை பார்த்தால் ராஜஸ்தானில் மட்டும் 105 மில்லியன் டன்னுக்கும் கூடுதலாக தங்கம் உள்ளது. அதாவது 10 கோடியே 5 லட்சம் டன்னுக்கும் கூடுதலாக தங்கம் நம் நாட்டில் ராஜஸ்தானில் மட்டும் உள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் தற்போதைய மதிப்பு 5800 ரூபாய் ஆகும்.


1980-ல் சீனாவும் இந்தியாவும் ஆண்டுக்கு 3 டன் தங்கம் உற்பத்தி செய்தது. தற்போது சீனா 440 டன்னும்  இந்தியா வெறும் 2 டன்னும் தங்கம் உற்பத்தி செய்கிறது. உற்பத்தி குறைவினால் ஆண்டுக்கு 3 லட்சம் கோடி ரூபாய்க்கு இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்கிறது.


 இதற்கு காரணம் அரசு மட்டும் அல்ல. தன்னார்வலர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் என்ற போர்வையில் வரும் இந்தியாவை சேர்ந்த வெளிநாட்டு கைகூலிகளும் அவர்களிடம் காசு வாங்கி கொண்டு பொய்யை வெளிப்படுத்தும் ஊடகங்களும் கொள்ளை அடிக்க நினைக்கும் அரசியல்வாதிகள் மற்றும்; அதிகாரிகளும் கூட.   நம்மிடம் இருக்கும் செல்வத்தை நம்மை எடுக்க விடாமல் நம்மை வைத்தே தடுத்துக் கொண்டு நம் பணத்தை அன்னிய நாடுகள் வணிகம் என்ற பெயரில் சுருட்டுகின்றன. இது ஒரு உதாரணமே. ஏராளமான கனிம வளங்களை கொண்டுள்ள இந்தியா சரியான திட்டமிடல் மற்றும் செயல்பாடு மூலம் உலகத்திலேயே முதல் பணக்கார நாடாக மாற முடியும். இதற்கு அரசியல்வாதிகள் நேர்மையாக செயல்பட வேண்டும். 




Monday 10 August 2020

இந்திய உற்பத்தியாளர்கள் ஊக்குவிக்கப் பட்டால் இந்தியா சைனாவை பின்னுக்கு தள்ளும்.

 கார்னட் உற்பத்தியில் இந்தியா உலக வரிசையில் 14-வ இடத்தில் இருந்தது. விவி மினரல் உற்பத்திக்கு வந்து 12 வருடங்களில் இந்தியா முதல் இடத்திற்கு வந்தது. இந்திய உற்பத்தியாளர்களின் கடும் உழைப்பும் நேர்மையும் உலக உற்பத்தியாளர்கள் வரிசையில் இந்தியாவை முதல் இடத்திற்கு கொண்டு வந்தது. 


ரேர் எர்த் தனிமங்கள் இருப்பில் இந்தியா சைனாவை முந்த வாய்ப்பு உள்ளது. ஆனால் சைனா உற்பத்தியாளர்கள் இந்தியாவில் உள்ள சில சமூக விரோதிகளையும், காசுக்கு விலை போகும் ஊடகவியலாளர்களையும், லஞ்சத்திற்கு அடிமையான அதிகாரிகளையும் கைக்குள் வைத்து இந்த உற்பத்தியை இந்தியா செய்ய விடாமல் பல தலைமுறைகளாக தடுத்து வந்தது. அதற்கு காரணம் உலக ரேர் எர்த் உற்பத்தியில் 95 சதவீதத்தை சைனா கையில் வைத்து அனைத்து நாடுகளையும் மிரட்டி வருகிறது. 80 சதவீத உற்பத்தியை அமெரிக்காவிற்கு அனுப்பி அமெரிக்காவையும் கட்டுக்குள் வைத்துள்ளது.


ரேர் எர்த் உற்பத்திக்கான தொழில் நுட்பத்தை மோடி அவர்கள் ஜப்பான் அரசிடம் பேசி ஒப்பந்தம் செய்து இணைத்துறையில் தற்போது ஒரே ஒரு கம்பெனி விசாகபட்டிணத்தில் டொயோட்டா என்ற ஜப்பான் நிறுவனத்தால் வைக்கப் பட்டுள்ளது. இதன் ஆண்டு உற்பத்தி திறன் 4000 டன் மட்டுமே. ஆனால் இந்தியாவிற்கு மட்டும் இதன் தேவை  ஆண்டுக்கு சுமார் 8000 டன். தற்போது இந்தியா சுமார் 35000 கோடி ரூபாயை அன்னிய செலாவணியாக வழங்கி இவற்றை இறக்குமதி செய்கிறது. இவை ஆகாய விமானம், ஏவுகணை, காற்றாலை, நவீன கார், கைபேசி என அனைத்து வகையான நவீன சாதனங்களிலும் உபயோகப்படும்.


உலக கையிருப்பில் 3-ல் ஒரு பங்கு கனிமங்களை கொண்டுள்ள இந்தியா, அதனை சரியாக பயன்படுத்தாததால் சைனா இவ்வாறு ஏகபோகமாக இந்த உற்பத்தியில் உள்ளது. இந்தியாவும் சைனாவே நம்பியே உள்ளது. தமிழ்நாட்டின் விவி மினரல், ஆந்திராவின் ட்ரைமேக்ஸ், கேரளாவின் சி.எம்.ஆர்.எல் நிறுவனங்கள் இதனை உற்பத்தி செய்ய அனுமதி கேட்டு அணுசக்தி துறையை எட்டு வருடங்களுக்கு முன்பாகவே அணுகியது. 



அந்த அனுமதிகள் கொடுக்கப் பட்டு இருந்தால் தற்போது இந்தியா ரேர் எர்த் உற்பத்தியில் முதல் இடத்தில் இருக்கும். இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 90,000 கோடி ரூபாய் அன்னிய செலவாணி வருவாய் வந்திருக்கும். சுமார் 5 லட்சம் நபர்களுக்கு மேல் வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். மேக் இன் இந்தியா திட்டத்தை அமுல் படுத்தி இந்திய உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் சைனாவின் ஏகபோகத்தை முறியடித்து இந்தியா முதல் இடம் பிடிக்க முடியும். கீழே கொடுக்கப் பட்டுள்ள வீடீயோ ஆங்கிலத்தில் உள்ளது. இது சைனாவின் ஏகபோகத்தையும், இந்தியா ரேர் உற்பத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் விளக்குகிறது.