Sunday 26 February 2017

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கருணாகரன் IAS அவர்களின் குற்றச்சாட்டு மற்றும் பத்திரிக்கை வெளியீட்டிற்கு திரு.சக்தி கணபதி, மேலாளர், வி.வி.மினரல் அவர்களின் பதில் மற்றும் அவரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு

வி.வி.மினரல் நிறுவனம் 2001ம் ஆண்டு முதல் சட்டப்படியாக ராயல்டி செலுத்தி 98 லட்சம் டன் இருப்பு வைத்திருந்தோம்; . இவை அனைத்தும் முந்தைய மாவட்ட ஆட்சியரால் உறுதி செய்யப்பட்டு ராயல்டி கணக்கு முடித்து உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அதில் இதுவரை 58 லட்சம் டன் ஏற்றுமதி செய்து மீதி சுமார் 40 லட்சம் டன் இருப்பு வைத்துள்ளோம். இந்த கணக்குகளை மத்திய , மாநில அரசு அதிகாரிகளும் நேரடியாக கள ஆய்வு மேற்கண்டு கணக்குகளை ஆய்வு செய்து மத்திய மாநில அரசுகளுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள். ஆனால் சில தொழில்போட்டியாளர்களோடு சேர்ந்த சுயநல கும்பலோடு பழக்கத்தில் இருக்கும் ஆட்சித்தலைவர் அவர்கள் எந்த அதிகாரமும் இல்லாமல் முந்தைய ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை தவறு என ரத்து செய்வதாக குறிப்பிட்டும் ஏற்கனவே ராயல்டி செலுத்திக் கொண்டு வந்த கனிமங்களையும் இயக்க அனுமதி சீட்டுகளையும் ரத்து செய்வதாக குறிப்பிட்டு எனவே இது சட்ட விரோதம் என பத்திரிக்கை விளம்பரத்திற்காகவும், பழி தீர்க்கவும் இவ்வாறு ஒரு அறிக்கை அனுப்பி உள்ளார். ஒரு கலெக்டர் போட்ட உத்தரவை மேல் அதிகாரிகள்தான் மாற்ற முடியுமே தவிர பிறகு வரும் கலெக்டர் மாற்ற முடியாது என்ற அடிப்படை அறிவு, படிப்பறிவு இல்லாத குடிமகனுக்கு கூட தெரியும். ஏந்த சட்ட விதிகளில் இவ்வாறு மாற்றுவதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது? அதனைக் குறிப்பிட்டு சொல்ல தயாரா? இயக்க அனுமதி சீட்டு இல்லாமல் கொண்டு சென்றதாகவும் சட்டவிரோத ஏற்றுமதி செய்ததாகவும் ஒரு உயர் பதவியில் உள்ள அதிகாரி பொறுப்பில்லாமல் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளார் . உண்மையில் இயக்க அனுமதி சீட்டு வாங்க வேண்டும் என எந்த சட்டவிதிகளிலும் இல்லை. குத்தகைதாரர் கேட்டால் அனுமதிச் சீட்டு கொடுக்க வேண்டும் என்பதுதான் நடைமுறை. அது கட்டாயமல்ல. அதே போல் எங்கள் நிறுவனம் கேட்டதின் பேரில் இயக்க அனுமதிச் சீட்டு வழங்குவதற்கு தமிழக அரசு சில நடைமுறைகளை வகுத்து ஒரு கடிதம் எழுதியது. இதற்கிடையில் இந்திய அரசு சட்டவிதிகளில் மாற்றம் கொண்டு வந்ததால் அந்த கடிதம் செல்திறன் அற்றதாகி விட்டது என்ற விபரத்தை ஏற்கனவே ஆணையாளர் அவர்கள் அரசுக்கு தெரியப்படுத்தி அரசும் கடந்த 31-07-2003 தேதி அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்லைவருக்கும் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தியது. அதே போல் ஏற்றுமதி என்பது மாநில அரசு சம்பந்தப்பட்டதல்ல. மத்திய அரசு சம்பந்தப்பட்டது. ஏற்றுமதிக்கு கனிம சட்டம் பொருந்தாது என்பதை இந்திய அரசு ஏற்கனவே தெரியப்படுத்தி உள்ளது. அதனை நான் ஒப்புக் கொள்ள முடியாது என சர்வ வல்லமை படைத்த கலெக்டர்(?) உத்தரவிடும் போது யார் என்ன செய்ய முடியும் . தற்போதைய நீதித்துறையின் நிலை அனைவருக்கும் தெரியும். உடனடி நீதி இந்தியா போன்ற நாட்டில் சாத்தியமில்லை என்பதால்தான் சில அதிகாரிகளிகளின் அத்து மீறல்கள் தொடர்கின்றன. எத்தனை வருடமானாலும் நீதி நிலை நிறுத்தப்படும்.

பஞ்சாயத்து உரிமம் வாங்கவில்லை என்று தான் நடவடிக்கை எடுத்ததாகவும் , இது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவில் உரிமம் எடுக்க உத்தரவிட்டதாகவும் கூறியுள்ளார். வேறு சில கம்பெனிகளுக்கு பிறப்பித்த உத்தரவை அடியொற்றி மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது உயர்நீதி மன்றத்தில் இது சம்பந்தமாக ஒரு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படுகிறது. உண்மையில் மேற்கண்டவை தொழிற்சாலை சட்டத்தில் வராது என ஏற்கனவே உரிய நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தீர்ப்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவரும் பிரதிவாதி. எனவே அவருக்கு இந்த உண்மை தெரியும். இருப்பினும் உண்மையை மறைத்து உள்நோக்கத்தோடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போல் தினசரி ஒரு உத்தரவு பிறப்பிப்பேன். என் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது, ஏனென்றால் நான் அரசு என சவால் விடுபவரிடம் சாதாரண நிறுவனங்கள் என்ன செய்ய முடியும். நீதிமன்றம் மட்டுமே தஞ்சம். எனவே அதுவரை பொறுத்திருக்கத்தான் வேண்டும். பொறுத்திருக்கிறோம். மாவட்ட ஆட்சித்தலைவரின் பத்திரிக்கை செய்திக்;குக் காரணம் அவர் மீது நாங்கள் குற்ற நடவடிக்கை எடுக்க இருக்கிறோம் என்ற விபரத்தை அவருக்கு மிகவும் நெருங்கியவரான எங்களுக்கு எதிராக எழுதுவதற்கென்றே நியமிக்கப்பட்டுள்ள பத்திரிக்கiயாளர் திருமதி. சந்தியா ரவிசங்கருக்கு கடந்த 20.02.2017 ல் மின் அஞ்சல் மூலம் தெரியப்படுத்தினோம். நீதிமன்றங்களில் உள்ள வழக்கில் நீதிமன்றத்தை எங்களுக்கு எதிராக திருப்புவதற்காக கடந்த 14.02.2017 ல் ஒரு கூட்டம் நடந்தது போலும் அதில் 2001 முதல் 2007 வரை உள்ள காலத்தில் நாங்கள் பெரும் அளவு கூடுதலாக கனிமம் தோண்டியது போலும் ஒரு கணக்கீடு தயாரித்து அதனை உடனடியாக வாட்ஸ்அப்பில் வெளியிட வைத்தார். இது பத்திரிக்கை நண்பர்கள் சிலர் மூலம் தெரிய வந்ததாலும் சட்டப்படி எங்களுக்கு காரணம் கேட்கும் அறிவிப்பு அனுப்பி அதில் எங்கள் மீது உள்ள குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டு அதன் பிறகு விசாரணை அறிவிப்பு அனுப்பி பிறகு நேர்முக விசாரணை நடத்தி அதன் பிறகுதான் உத்தரவு பிறப்பிக்கப்பட முடியும். ஆனால் இந்த இனத்தில் பத்திரிக்கைகளுக்காக மேற்கண்ட நடைமுறையை பின்பற்றாமல் இவர் தயாரித்து கொடுத்ததை நாம் ஏன் பொருட்படுத்த வேண்டும் என நிர்வாகத்தில் முடிவு செய்தார்கள். ஆனால் இவரோடு கூட்டு சேர்ந்துள்ள சந்தியாவிடமிருந்து எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் அவர் சில கேள்விகளை கேட்டிருந்தார். அதற்கு எங்கள் நிர்வாகத்தில் இருந்து பதில் கொடுக்கும் பொழுது அவ்வாறு எந்த அறிவிப்பும், உத்தரவும் கிடைக்கப்பெற வில்லை என்றும் மாவட்ட ஆட்சித்தலைவரின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு குற்றநடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் அவருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. இந்த விபரங்களை http://vvmemp.blogspot.in/2017/02/blog-post.html -ல் காணலாம். உடனடியாக சந்தியா மாவட்ட ஆட்சியரிடம் பேசி மாவட்ட ஆட்சியரும் 20.02.2017 தேதியில் கையொப்பம் இட்டு எங்கள் மற்றும் இதர நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பினார்கள். அவர்கள் வாட்ஸ்அப்பில் 14ம் தேதி எங்களுக்கு எதிராக வேண்டுமென்றே பத்திரிகைகளுக்கு பரப்பிய அறிக்கை நகலும் 20ம் தேதி கையொப்பமிட்டு எங்களுக்கு அனுப்பிய அறிக்கை நகலும் எங்களிடம் உள்ளது. மேலும் சில தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டுள்ளோம். அவை கொடுக்கப்பட்டால் குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு விடும் என்பது தெரிந்தே கொடுக்கப்படாமலும் மறுக்கப்படாமலும் உள்ளது. தற்போது தகவல் ஆணையத்தில் மேல்முறையீட்டில் உள்ளது. எனவே நாங்கள் சட்டப்படி மட்டுமே நடவடிக்கை மேற்கொள்வோம். அவதூறு பரப்புவதோ சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதோ எங்களுக்கு பழக்கமில்லை. தற்போது பத்திரிகை செய்தி படித்தபிறகுதான் இதுபற்றி விசாரிக்கும் போது அவருக்கு எதிராக சில குற்றச்சாட்டுகள் சில நபர்களால் கூறப்பட்டுள்ளது தெரிய வந்தது. கிராமத்தில்ஒரு பழமொழி உண்டு . “ஊருக்கு எஜமான் கையைப்பிடித்து இழுத்தால் யாரிடம் முறையிட” . அதே நிலைதான் தற்போது . மாவட்ட ஆட்சித்தலைவர் என்ற பதிவு இருப்பதால் அவருக்கு கீழே உள்ள அனைத்து அதிகாரிகளும் பல்வேறு புகார்களை கொடுப்பார்கள். புல்வேறு அறிக்கைகளில் கையொப்பம் இடுவார்கள். ஆனால் இன்ன சட்டம் , இன்ன பிரிவு படி இது தேவை , அது இந்த அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டு அவர்கள் காட்டியுள்ளார்களா? பாமர கூலித்தொழிலாளி இந்த செய்தியை படித்து விட்டு கேட்கிறான். புகாரை மறுத்து மறுப்பு அறிக்கை கொடுக்காமல் காவல் நிலையத்தில் புகாhர் கொடுப்பதற்கு காரணம் என்ன , அப்படியானால் அவர் மீது உள்ள புகார் வெளியே வர கூடாது என மிரட்டுவதற்கா என பேசுகிறார்கள். அது பற்றி எங்களுக்கு தேவையில்லை. எங்களைப் பொறுத்தவரையில் சட்டவிதிகளுக்கு உட்பட்டு சட்டப்படி நடைபெற்று வரும் ஒரு நிறுவனம் . இனிமேலும் சட்ட விதிகள் மாறப்படாது. எங்கள் போட்டி நிறுவனங்களால் எங்களுக்கு எதிராக திட்டமிட்டு பொய் செய்தி பரப்பவுதற்கு என அனைத்து மட்டத்திலும் சில நபர்கள் எடுக்கப்பட்டு அவர்கள் திட்டமிட்டு இந்த செயலை செய்து வருகிறார்கள். மேலதிக விபரங்களை http://vetri3337.blogspot.in/ ல் எங்கள் தொழிலாளி ஒருவர் பதிந்து வருகிறார். அதிலும் தெரியலாம். உயர் அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் இருக்கும் விபரத்தை வீடியோவாக கவர் செய்து வெளியிட்டுள்ளோம். அதனை www.beachminerals.org என்ற இணையத்தில் காணலாம்.

மாவட்ட ஆட்சியரின் விசாரணை முறையான அறிவிப்பு அனுப்பி காரணம் கேட்கும் அறிவிப்பு, உத்தேசக் குற்றச்சாட்டுகள் முதலியவை தெரியப்படுத்தி விளக்கம் கேட்டு, நேர்முக விசாரணை நடத்தி சட்டப்படி சரியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால் என்றைய தினம் காரணம் கேட்கும் அறிவிப்பு அனுப்பப்பட்டது, அதில் என்னென்ன குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன , அதற்கு ஆதாரமாக என்னென்ன ஆதாரங்கள் கொடுக்கப்பட்டன, என்றைய தேதியில் பதில் பெறப்பட்டது, என்றைய தேதியில் நேர்முக விசாரணை கொடுக்கப்பட்டது என தேதி வாரியாக அவற்றை தெரியப்படுத்தினால் உள்நோக்கத்தோடு மாவட்ட ஆட்சியர் செயல்பட்டது தெரிய வரும். மாறாக மாவட்ட ஆட்சியர் இரண்டு நபர்களோடு சேர்ந்து அவர்களுக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பித்து தருவேன் என உறுதி கூறியுள்ளார் என மேற்கண்ட இரண்டு நபர்களும் வெளியே பேசி வருகிறார்கள். எனவே எங்களுக்கு நேர்முக விசாரணை வேண்டும் என்று நாங்கள் பதில் கொடுக்க வேண்டும் என தெரியப்படுத்தங்கள் என கடந்த 12-10-2016 அன்று பதிவு அஞ்சலில் கடிதம் எழுதினோம். அதன் ஒப்புதல் அட்டை எங்களிடம் உள்ளது. ஆனால் நேர்முக விசாரணை கொடுத்தால் எங்களுக்கு எதிராக இவ்வாறு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்பதால் 9-11-2016 அன்று ஒரு தலைப்பட்சமாக உத்தரவு பிறப்பித்தார். நாங்கள் 12-10-2016 ல் கேட்டப்படி நேர்முக விசாரணை கொடுக்கப்பட்டது என்பதை நிரூபிக்க தயாரா?

இந்திய காலாவதி சட்டப்படி மூன்று வருடத்திற்கு முன்பு உள்ள இனங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை மறுபரிசீலனை கூட செய்ய முடியாது. வருமானவரி சட்டப்படி ஐந்து வருடங்களுக்கு முந்தைய இனங்களை மறுபரிசீலனை செய்ய முடியாது. கனிம சட்டப்படி ஒரே நிலையில் உள்ள அதிகாரி போட்ட உத்தரவை மத்திய அரசு இல்லாமல் மாநில அரசு கூட திருத்தவோ, மாற்றவோ, ரத்து செய்யவோமுடியாது. ஆனால் இந்த இனத்தில் சட்டப்படி அதிகாரமே இல்லாமல் இடையூறு உருவாக்கும் ஒரே நோக்கத்தோடு 2001 முதல் 2007 வரை அதாவது 17 வருடங்களுக்கு முன்பு உள்ள காலத்தில் நடந்தது என 14-02-2017ல் ஒரு தீர்மானத்தை உற்பத்தி செய்து அதனை அலுவலகத்தில் இருந்தே பத்திரிகைகளுக்கு அனுப்பியது சட்டப்படி தண்டிக்கப்படக் கூடிய குற்றமா? இல்லையா? புத்திரிக்கைக்கு அரசு ஆவணத்தை கொடுத்தது யார்? இது பற்றி விசாரிக்க வேண்டுமா? இல்லையா? திரு.கருணாகரன் மீது குற்ற நடவடிக்கை எடுப்பேன் என திரு.வைகுண்டராஜன் 20-2-2017 ல் திருமதி. சந்தியாவிற்கு எழுதிய மின்னஞ்சலை அவரிடம் இருந்து பெற்று பார்;த்து அதற்கு எதிராக ஒரு ஆவணத்தை உற்பத்தி செய்வதற்காக ஒன்றுக்கு இரண்டு குற்ற வழக்குகளை பதிவு செய்திருக்கிறேன் என பத்திரிகை செய்தி கொடுத்துள்ளார். அவர் அலுவலகத்தில் உள்ள 14-02-2017 தேதிய ஆவணம் சந்தியாவின் கைகளுக்கு எவ்வாறு போனது? அதனை கொடுத்தது யார்? இது பற்றி ஒரு சிபிஐ விசாரணைக்கு தயாரா? மாவட்ட ஆட்சியரின் இந்த அறிவிப்பு திரு.சந்தியா கும்பலோடு திரு.கருணாகரன் அவர்கள் ஐக்கியமாகி உள்ளார்கள் என்பதை நிரூபிக்காதா?

மாவட்ட ஆட்சியர் மீது முகநூல்களில் வந்த குற்றச்சாட்டுக்கள் தாதுமணல் சம்பந்தமாக இல்லை. மாறாக சட்டவிரோதமாக துப்பாக்கி உரிமம் வழங்கியது , ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டும் வேலை வாய்ப்பு வழங்கியது மற்றும் கல், மணல் குத்தகை வழங்கியது என்பன போன்றது. இதற்கும் வி.வி.மினரல் நிறுவனத்திற்கும் அல்லது திரு.வைகுண்டராஜன் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சில பத்திரிகைகள் விளம்பரம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்திலும் , சில பத்திரிகைகள் மாவட்ட ஆட்சியரின் தயவு வேண்டும் என்ற எண்ணத்திலும் இதனைப் பெரிது படுத்தி வெளியிட்டிருக்கலாம், ஆனால் உண்மை நிலை மேலே சொன்னதுதான். திரு.வைகுண்டராஜன் சந்தியாவிற்கு அனுப்பிய மின்னஞ்சல் மேலே உள்ள இணைய முகவரியில் உள்ளது. தயவு செய்து அதனையும் பார்த்துக் கொள்ளுங்கள். இது பொதுமக்களுக்கு உண்மை நிலவரம் தெரிவிப்பதற்காக வெளியிடப்படுகிறது.

தயவு செய்து இந்த செய்தியை தங்கள் பத்திரிக்கையில் வெளியிட கேட்டுக் கொள்கிறேன்.

விவி மினரல் நிறுவனத்திற்காக

C. சக்தி கணபதி
மேலாளர்

-Translated Version will be uploaded soon...


No comments:

Post a Comment