Saturday 17 March 2018

கதிரியக்கம் பற்றிய உண்மைகள்

நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக அமைந்துள்ளது தாது மணல் தொழில். இது ஏராளமான நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதோடு இந்திய அரசுக்கு அந்நிய செலவாணியும் ஈட்டி தருகிறது. ஆனால் சில தொழிற்போட்டியாளர்கள் மற்றும் அந்நிய நிறுவனங்களிடம் கைக்கூலி பெற்றவர்கள், ஊடகங்கள் எல்லாம் சேர்ந்து இந்த தொழிலுக்கு எதிராக ஒரு பொய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளன. அதில் முக்கியமானது இந்த தாது மணல் தொழில் கதிரியக்கத்தை வெளியிடும். இதனால் பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது ஆகும். உண்மையில் இது கதிரியக்கத்தை வெளியிடாது. கதிரியக்கம் தொடர்பான எந்த பொருளும் தாது மணல் உற்பத்தியாளர்களாளோ தொழிலாளர்களாளோ உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்படுவதில்லை. கதிரியக்கம் பொதுப்படையாக எல்லா நிலையிலும் வரும். குறிப்பிட்ட உணவு பொருட்களிலும் கதிரியக்கம் உள்ளது. கதிரியக்கத்தின் மூல காரண கர்த்தா சூரியன். கடல் மட்டத்தில் இருந்து மேலே செல்ல செல்ல மனிதன் கதிரியக்க பாதிப்பை அதிகமாக உள்வாங்குகிறான். இவ்வாறு கதிரியக்கம் பற்றி விரிவான தகவல்களை அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகம்  நடத்திய கதிரியக்கம் பற்றி விழிப்புணர்வு கருத்தரங்கத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் குறிப்பிட்டுள்ளத்தில் இன்னொரு முக்கிய அம்சம், மனிதனால் ஏற்படுத்தப்படும் கதிரியிக்க காரணிகளில் தாது மணல் சுரங்க தொழிலோ, தாது மணல் உற்பத்தியோ, தரம் பிரித்தலோ வராது. ஒரு நிலக்கரியை வைத்து மின்சாரம் தயாரிக்கும் தொழிற்சாலையில் உற்பத்தியாகும் நிலக்கரி குப்பையில் உள்ள கதிரியக்கம் மிக அதிகம். இவ்வாறு நல்ல பல தகவல்கள் உள்ளன. எனவே இது தொழிலாளர்களுக்கும் தெரிய வேண்டும். தொழிலாளர்கள் இதனை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் வெளியிட்ட கதிரியக்கம் தொடர்பான கட்டுரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதன் தமிழ் ஆக்கம் ஒவ்வொரு நாளும் நமது முகநூலிலும் வெளியிடப்படும்.






























































1 comment:

  1. ஐயா இது எல்லாருக்குமே தெரியும். நாங்க சொந்த பகைக்காகவும், தொழிற்போட்டிக்காகவும் ஆத்து மணலை போல இந்த தாது மணலையும் சுவாகா பண்ண தான் கதிரியக்கம், கழுதை , குதிரன்னுட்டு இருக்கோம். எங்க கிட்ட நீங்க செட்டில் செய்யாத வரை அது அமெரிக்காவா இருந்தாலும் சரி ஐநா சபையா இருந்தாலும் சரி அவங்க சொல்லறது எல்லாமே தப்புன்னு தான் நாங்க சொல்லுவோம் - தமிழக அரசியல்வாதிகளின் மைன்ட் வாய்ஸ்

    ReplyDelete