Wednesday 13 June 2018

தாது மணல் தொழிலில் இல்லிசிட் மைனிங் என்ற புகாரே உள்நோக்கம் கொண்டது. அடிப்படை ஆதாரம் அற்றது.

இந்தியாவில் இல்லிசிட் மைனிங்கை கண்டு பிடிக்க சேட்டிலைட் சர்வைலன்ஸ் சிஸ்டம் என்ற ஒரு செயற்கைகோள் அமைப்பு உள்ளது. இது எந்த இடத்தில் பள்ளம் தோண்டினாலும் அதை பற்றி ஏழு தினங்களுக்குள் இதன் தலைமை அலுவலகம் உள்ள ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் இந்தியன் பீரோ ஆப் மைன்ஸ் அலுவலகத்திற்கு (With latitude and Longitude)  அனுப்பி வைக்கும். இவ்வாறு கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 99 இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. குற்ற வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. இதனை தொழிற்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் சமர்பித்த புவியியல் மற்றும் சுரங்கத்துறைக்கான கொள்கை விளக்க குறிப்பில் தெரிவித்துள்ளார். அரசியல் காரணங்களுக்காகத் தான் தாது மணல் தொழில் பொய்யான குற்றச்சாட்டுகளுடன் நிறுத்தப் பட்டுள்ளது என்பது இப்போது புரிகிறதா!!!


Source :  http://www.tnmine.tn.nic.in/GO/Ind-pn-2017-18.pdf

No comments:

Post a Comment