Thursday 5 July 2018

உலகில் எந்த இடத்திலும் அணு உற்பத்திக்கே பயன்படாத மோனசைட்டை அணு உற்பத்திக்கான மூலப் பொருள் என்று வாங்கிய காசுக்கு தமிழக மக்களை ஏமாற்றும் ஜீனியர் விகடன் செய்திக்கு மறுப்பு

இந்திய தாது மணல் தொழில் வளர்ச்சியால் உலக அளவில் இந்தியா முதலிடத்தை பெற்றது. வளர்ந்த நாடுகள் பல தங்களது வியாபார பங்களிப்பை இந்திய உற்பத்தியாளர்களிடம் இழந்தார்கள். இவர்கள் அனைவரும் சில அதிபுத்தி உள்ள கெட்டவர்களின் திட்டத்தோடு சில ஊடகங்களையும் கையில் எடுத்து இந்த தொழிலுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். முன்பு அதிமுக ஆட்சியில் நிழல் உலக அரசு நடத்திய ஒரு குடும்பத்தினரை பற்றியும் ஆற்று மணல் கொள்ளை பற்றியும் எழுதாமல் இருக்க ஜீனியர் விகடன் பத்திரிக்கையில் உள்ள சில ஆசிரியர்கள் தங்களுக்கு சினிமா படம் எடுக்க நிதி வேண்டும் என பல கோடி பெற்று சினிமா படம் எடுத்தார்கள் என்பது ஊர் அறிந்த ரகசியம். அதே முறையில் விவி நிறுவனத்தை அணுகும் போது விவி நிறுவனம் பணம் கொடுக்க மறுத்ததும் இந்த பொய் பிரச்சாரத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனாலும் செய்தி தெரிந்ததால் நாம் உண்மை நிலவரத்தையும் நமது ஆட்சேபணையையும் முன் அஞ்சல் மூலம் ஜீனியர் விகடன் பத்திரிக்கைகும், இதர பத்திரிக்கைகளுக்கும் அனுப்பி உள்ளோம். இவர்களது நோக்கம் நீதித்துறையின் கவனத்தை திசை திருப்பி தாது மணல் தொழிலுக்கு இடையூறாக மாற்றுவது தான். இருப்பினும் உண்மை நிலையை தெரிவிக்க வேண்டியது நமது கடமை என்பதால் ஜீனியர் விகடனுக்கு அனுப்பிய ஆட்சேபணை மின் அஞ்சல் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

***************

From: VVM Employees Association <vvmemployees@gmail.com>
Date: 2018-07-06 12:12 GMT+05:30
Subject: Objection to false news published about VV Mineral
To: editor@vikatan.com, jv@vikatan.com, av@vikatan.com, aval@vikatan.com
Cc:  All Medias
                                                                                             நாள் : 06.07.2018
பெறுநர் 

ஆசிரியர்
ஜீனியர் விகடன்,
சென்னை

ஐயா,

“தாது மணல் விவகாரம் 2 - அணு ஆயத மூலப்பொருள்” என்ற தலைப்பில் 08.07.2018 தேதியிட்டு தாங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டு இருப்பவை உண்மைக்கு மாறானவை. உள்நோக்கம் கொண்டவை.

மோனசைட் என்பதில் இருந்து ரேர் எர்த் என்னும் உட்கூறுகள் மட்டுமே பிரித்து எடுக்க முடியும். அதில் உள்ள தோரியம் என்பது பிளவு படும் தன்மை உடையது அல்ல. எனவே அது எவ்வகையான அணுசம்பந்தப்பட்;ட பணிகளுக்கும் உபயோகப்படாது. மோனசைட் கதிர்வீச்சு உடையது என்பதால் கதிர்வீச்சில் பணியாட்கள் மற்றும் பொது மக்கள் பாதிக்கப்படக் கூடாது என அதனை தனியாக பாதுகாத்து வைக்க வேண்டும் என்று சில கட்டுப்பாடுகளை அரசு விதிக்கும். அவை செயல்படுத்தப்படும். மற்றப்படி மோனசைட் என்பது எந்த அணு சம்பந்தப்பட்ட பணிக்கும் உதவாது. அவை செறிவூட்டப்படவும் முடியாது. இந்த மோனசைட் அணு கனிமம் என இந்திய அரசு அணுசக்தி துறையால் அறிவிக்கை செய்யப்பட்டாலும் அணுசக்தி துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தியன் ரேர் எர்த் நிறுவனம் மோனசைட்டை குவாரி செய்து வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை தான் செய்து வந்தது. மோனசைட்டிற்கு  சரியான விலை கிடைக்காததாலும் வெளிநாட்டிலேயே மோனசைட் மிக மலிவாக கிடைப்பதாலும் இந்திய அரசு நிறுவனமே மோனசைட் உற்பத்தியை 2004-ல் இருந்து நிறுத்தி விட்டது. இதனை பாராளுமன்றத்தில் வினா எண் 420 நாள் 26.11.14-க்கு பதிலாக மாண்புமிக அமைச்சர் அறிவித்தது இணையத்திலும் உள்ளது. இதில் இருந்து ஜீனியர் விகடன் பத்திரிக்கையில் பணி செய்யும் எந்த ஊழியரும் அல்லது ஆசிரியரும் அடிப்படை விஞ்ஞான அறிவு கூட இல்லாதவர் என்பது தெரிகிறது. தாங்கள் தாது மணல் தொழிலுக்கு எதிராக எழுதுவதை வழக்கமாக கொண்டுள்ளதால் இதனை மிகைப்படுத்த வேண்டும் என்று உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி உள்ளீர்கள்.

பத்திரிக்கை சுதந்திரம் என்ற ஒன்றை வைத்து தாங்கள் வீண் வதந்தியை பரப்புவது நீதிமன்றத்தில் தற்போது நடந்து வரும் வழக்கின் நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிப்பதற்காகத் தான் இருக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எனவே நீதிமன்றத்தில் இதன் தொடர்பாக வழக்கறிஞரை கலந்து ஒரு மனு தாக்கல் செய்யவும் உத்தேசித்துள்ளோம். 

எங்கள் நிறுவனத்திடம் நாங்கள் எங்களிடம் இருக்கும் சரக்கை ஒப்புக் கொண்டுள்ளோம். இதுவே அணுகனிமம், வெளியே கடத்தப்படாமல் பாதுகாப்பாக இந்தியாவிலேயே வைக்கப்படுகிறது என்பதை நிரூபிக்கும். தாங்கள் கூறி உள்ள அனைத்தும் கற்பனையானவை. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இது பற்றி கூடுதலாக குறிப்பிட முடியாது. ஜீனியர் விகடன்  விவி மினரல் நிறுவனம் எப்படி மோனசைட் டெய்லிங்சை வைத்துக் கொள்ள முடியும் என ஒரு கேள்வி எழுப்பி உள்ளது. விவி மினரல் நிறுவனம் உட்பட நான்கு நிறுவனங்களுக்கு மோனசைட் டெய்லிங்சை வைத்துக் கொள்ள இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அவை இந்திய அரசின் நிர்வாக கட்டுப்பாட்டிலேயே இருக்கும். இந்த விபரங்களை ஏற்கனவே இந்திய பாராளுமன்றத்தில் வினா எண் 2654 நாள் 13.3.13-க்கு பதிலாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனையும் நீங்கள் இந்திய அரசு இணையதளத்தில் பார்வையிடலாம். 

அணு ஆயுதம் அல்லது அணு மின் நிலையம் போன்ற எதற்கும் மூலப்பொருளாக உபயோகப்படாத மோனசைட் கனிமத்தை கதிர்வீச்சு வருகிறது என்ற ஒரே காரணத்திற்காக அணு ஆயத மூலப் பொருள் என பொது மக்களை ஏமாற்றும் வகையில் திரித்து பொய் செய்தி வெளியிடுவது பத்திரிக்கை தர்மமா என்பதை தயவு செய்து சிந்தியுங்கள்.

மூன்று மாதங்களுக்கு முன்பாகவே ஜீ.வி ஆசிரியர் குழுவிற்கு சினிமா படம் தயாரிக்க 50 லட்சம் ரூபாய் கொடுத்தாகி விட்டது. தொடர்ந்து 15 முறை விவி-க்கு எதிராக எழுத வேண்டும் என்பது தான் அதற்கு உள்ள நிபந்தனை என  எங்கள் போட்டி நிறுவனத்தினர் செய்தி பரப்பினார்கள். அது உண்மை என்பதை தற்போது ஜீனியர் விகடன் எழுதுவது நிரூபிக்கிறது. தயவு செய்து எங்களது இந்த ஆட்சேபணையை தங்களது பத்திரிக்கையில் அடுத்த முறை என்ன பொய் எழுதினாலும் நாங்கள் எழுதிய இந்த ஆட்சேபணையையும் சேர்த்து வெளியிடுங்கள்.

நன்றி

தங்கள் உண்மையுள்ள


சி.சக்தி கணபதி





Virus-free. www.avast.com


No comments:

Post a Comment