Wednesday 11 April 2018

தாது மணலால் கேன்சர் என்ற பொய்யர் கூட்டத்தின் பொய்யான பிரச்சாரம் தவிடு பொடி..!!!

தாது மணல் மற்றும் அணு மின் நிலையங்களால் கேன்சர் வருகிறது என்றும் இது பொது மக்களை பாதிக்கிறது என்றும் சில பொய் பிரச்சாரங்கள் சமூக விரோதிகளால் உள்நோக்கத்தோடு பரப்பப் பட்டு வருகிறது.  உண்மையில் தாது மணல் சுரங்கம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒரிசா ஆகிய நான்கு மாநிலங்களில் தான். ஆனால் இந்தியாவிலேயே கேன்சரில் முதலிடம் வகிப்பது உத்திர பிரதேசம். பிறகு மகாராஷ்ட்ரா, பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான். இவ்வாறு தாது மணல் சுரங்கம் இல்லாத மாநிலங்கள் தான் கேன்சர் நோயாளிகள் அதிகம் உள்ள மாநிலங்கள் ஆகும். இதனை கேன்சரால் இறந்த மாநில வாரியான பட்டியல் உள்ளது. மேலும் அணுமின்நிலையம் அல்லது கதிரியக்கத்தால் கேன்சரால் பாதிக்கப் பட்ட பகுதிகள் பற்றி பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு பிரதமர் சார்பாக பாராளுமன்ற அமைச்சர் கொடுத்த பதிலில் கதிரியக்கத்தால் அல்லது அணு மின் நிலையங்களால் தான் 70 சதவீத கேன்சர் மரணம் வருகிறது என ஊடகங்களில் வந்த செய்தி தவறானது என்பதையும் அணு மின் நிலையங்களில் பணியாற்றும் 22,224 பணியாளர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினரை ஆய்வு செய்ததில் யாருக்கும் கேன்சர் பாதிப்பு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். அதே போல் அணுமின் நிலையம் உள்ள பகுதிகளில் ஒரு லட்சம் பேருக்கு 28.7 முதல் 87.4 நபர்கள் வரை கேன்சர் பாதிப்பு உள்ளது என்றும் சராசரியாக இந்தியா முழுவதுமே ஒரு லட்சம் பேருக்கு 78.8 சதவீதம் கேன்சர் பாதிப்பு உள்ளது என்பதை பாராளுமன்றத்தில் கேள்வி எண் 647-க்கு கொடுத்த பதிலில் உறுதி செய்துள்ளார்கள். 

மேலும் தமிழ்நாடு அரசு சுகாதார துறையும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு கேன்சர் சம்பந்தமான அறிக்கையை சட்டமன்றத்தில் சுகாதார துறை சார்பில் சமர்பித்தது. அதில் தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், கடலூர், கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்கள் தான் அதிகமாக கேன்சர் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் என்பதை குறிப்பிட்டு உள்ளார்கள். தமிழ்நாட்டில் ஒரு லட்சம் பேரில் 65 ஆண்களுக்கும், அதே போல் ஒரு லட்சம் பேரில் 84 பெண்களுக்கும் கேன்சர் வருகிறது என்றும் தெரியப்படுத்தி உள்ளார்கள். இதனை தமிழ்நாடு அரசு சுகாதார துறை அறிக்கையில் 232-ம் பக்கத்தில் பார்க்கலாம்.

ஏற்கனவே தாது மணல் தொழிலாளர்களோ அவர் தம் குடும்பத்தினரோ எந்த நோயாலும் பாதிக்கப்படவில்லை என்பதை பதிவு செய்திருந்தோம். தற்போது தாது மணலுக்கு தொடர்பே இல்லாத மாவட்டங்கள் தான் கேன்சரால் பாதிக்கப் பட்டுள்ளன என்பதும் ஆவண படுத்தப்பட்டுள்ளது. போலி சமூக போராளிகள் என்ற பெயரில் பணம் பறிக்கும் மற்றும் பண மோசடி செய்யும் கும்பல்கள் பொது மக்கள் நலன் என்று தாது மணலுக்கு எதிராக திட்டமிட்டு செய்யும் பிரச்சாரங்கள் உண்மை அல்ல என்பதை மேற்கண்டவை நிரூபிக்கின்றன. தொழிலாளர் நண்பர்கள் இதனை மற்ற நண்பர்களுக்கும் சக தொழிலாளிகளுக்கும் தெரிய படுத்துங்கள். உண்மையை உரக்க கூறுவோம்..!!!

No comments:

Post a Comment