Monday 23 April 2018

தாது மணல் கனிமங்களை பிரித்து எடுப்பதில் நவீன தொழில் நுட்பம் பற்றி இந்திய அரசு விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்ப துறையின் கருத்தரங்கம்

மனிதன் கற்காலத்தில் இருந்து நாகரீக காலத்திற்கு மாறியதே கனிமங்களை சுரங்கம் செய்ய கண்டு பிடித்த பிறகு தான். அதன் பிறகு தான் பல்வகை உலோகங்கள், நாகரீகம் எல்லாம் வளர்ச்சி அடைந்தன. தேசிய அளவில் பொருளாதார முன்னேற்றம் என்பதே எவ்வளவு கனிமங்கள் குவாரி செய்து எடுக்கப்பட்டு அவை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றப்படுகிறது என்பதை பொறுத்து தான். தாது மணல் கனிமங்களின் முக்கியத்துவத்தை அறிந்து இந்திய அரசு தொழில் நுட்பம் மற்றும் விஞ்ஞான துறை கனிமங்களை பிரித்து எடுப்பதில் நவீன தொழில் நுட்பங்களை அனைவரும் தெரிந்து கொள்வதற்காக கருத்தரங்கை நடத்தியது. இவ்வாறு கருத்தரங்குகளை இரண்டு அல்லது மூன்றாண்டுக்கு ஒரு முறை நடத்துவது வளர்ந்த நாடுகளோடு இந்தியா தொழில் நுட்பத்தில் போட்டி இட வசதியாக இருக்கும். 



No comments:

Post a Comment